/* */

காஞ்சிபுரம் கோவிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி மண்டை விளக்கேற்றி வழிபாடு

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி பக்தர்கள் மண்டை விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் கோவிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி மண்டை விளக்கேற்றி வழிபாடு
X

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் கடை ஞாயிறு விழாவையொட்டி  மண்டை விளக்கேந்தி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் பல பிரசித்திபெற்ற திருக்கோயில்கள் நோய் தீர்க்கும் திருத்தலங்களாக விளங்கி வருகிறது. அவ்வகையில் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் கார்த்திகை மாதம் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் தங்களது தலை சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் தீர மாவினால் அகல் விளக்கு தயார் செய்து அதில் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.

கடந்த இரண்டுஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இவ்விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்து இருந்தது. கடந்தாண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றி அரசு வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்து அறிவிப்பு பலகைகள் கோயில் முழுவதும் வைக்கப்பட்டு இருந்தது.

ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 6 மணி முதலே சிறப்பு பூஜைகளுடன் கடை ஞாயிறு விழா துவங்கும்.ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து அரிசி மாவினால் விளக்குகள் தயார் செய்து விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே அர்ச்சனைகள் மேற்கொண்டு அதன் பின் தீபம் ஏற்றி தலையில் வைத்து கோயில் பிரகாரங்களில் வலம் வந்து நேர்த்தி கடன் செலுத்தி நோய் தீர்க்க வேண்டுதலுடன் சிறுவர் முதல் பெரியவர் வரை வழிபாடு மேற்கொள்வர்.

இந்நிலையில் தற்போது கோயில் திருப்பணிகள் நடந்து வருவதால் பொதுமக்கள் கடை ஞாயிறு விழாக்கள் நடைபெறுமா என சந்தேகம் அடைந்த நிலையில் இந்தாண்டு கச்சபேஸ்வரர் திருக்கோயிலில் வழக்கம்போல் கடை ஞாயிறு விழா நடைபெறும் என கோயில் செயல் அலுவலர் ப.பூவழகி அறிவித்து இருந்தார்.

மேலும் நவம்பர் மாதம் 20 மற்றும் 27 தேதிகளிலும், டிசம்பர் மாதம் 4 , 11 மற்றும் 15 தேதிகளில் கடை ஞாயிறு விழா நடைபெறும் எனவும், அதனைத் தொடர்ந்து 2023 ஜனவரி 6ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட நாட்களில் இத்திரு கோயில்களில் எவ்வித திருக்கல்யாண நிகழ்வுகளும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் செயல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.

இதன்படி முதல் கடை ஞாயிறு விழா இன்று அதிகாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் துவங்கியது. காலை முதலே பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்த திருக்கோவிலுக்கு வந்தனர்.

சிறிய மண்சட்டியில் அரிசி மாவு கொண்டு விளக்கு உருவாக்கி அதில் நெய் தீபம் ஏற்றி தலையில் சுமந்தவாறு விநாயகர் மற்றும் கொடிமரம் அருகே சிறப்பு பூஜைகள் மேற்கொண்டு கோயிலை வலம் வந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் கோயில் வளாகம் முழுவதும் மண்டை விளக்கேந்தி நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்களாகவே காட்சியளித்தது. இந்தக் கடை ஞாயிறு விழாவையொட்டி காவல்துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

Updated On: 20 Nov 2022 10:25 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...