/* */

சாமி சிலை கற்கள் கடத்தல் என புகார் : வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தீடிர் ஆய்வு

காஞ்சிபுரம் அடுத்த மதுரா சங்கராபுரம் கிராமத்தில் உள்ள மலை குன்று அரசு புறம்போக்கில் உள்ள சாமி சிலைகள் செய்ய பயன்படும் அரிய கற்களை வெட்டி சிற்ப வேலைக்களுக்கு கடத்துவதாக வந்த ரகசிய தகவலையடுத்து காஞ்சிபுரம் வருவாய்க் கோட்டாட்சியர் இராஜலட்சுமி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

சாமி சிலை கற்கள் கடத்தல் என புகார் : வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தீடிர் ஆய்வு
X

காஞ்சிபுரத்தில் சட்டவிரோதமாக கற்கள் உடைத்து கடத்தப்படுவதாக வந்த தகவல் அடிப்படையில் சம்பவ இடத்தில் வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , பழையசீவரம் அடுத்த மதுரா சங்கராபுரம் கிராமத்தில் மலைகுன்றுகள் உள்ளது. இங்குள்ள மலைகுன்றில் உள்ள அரியவகை பாறைகள் சிலைகள் செய்ய ஏதுவாக உள்ளது.இவை அனைத்தும் அரசு‌ குன்று புறம்போக்கில் அதிகளவில் உள்ளன

இந்நிலையில் தற்போது ஜாமபந்தி நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் இங்குள்ள அரியவகை கற்பாறைகளை உள்ளூர்‌ ஆட்களுடன் வெட்டி மாமல்லபுரம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சிற்பக் கூடங்களுக்கு நள்ளிரவில் கடத்தல் செய்து வருவதாக புகார் தெரிவித்தனர்.

புகார் பெற்றவுடன் அப்பகுதியில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் ராஜலட்சுமி தீடிர் ஆய்வு மேற்கொண்டபோது பல இடங்களில் பாறை வெட்டி கற்கள் தயார்நிலையில் இருப்பதைப் பார்ததார்.

இதுகுறித்து கனிம வள அதிகாரிகளுக்கு வருவாய்த்துறை தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே இங்கு கற்கள் வெட்ட வேண்டும் என அறிவுரை வழங்கியும் , இன்று முதல் காவலர் ஒரு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 24 Jun 2021 7:00 AM GMT

Related News