/* */

சர்வதேச புற்றுநோய் தினத்தையொட்டி தலைமுடி தானம் செய்த பள்ளி மாணவிகள்

சர்வதேச புற்றுநோய் தினத்தையொட்டி காஞ்சிபுரம் பள்ளி மாணவிகள் தலைமுடி தானம் செய்தனர்.

HIGHLIGHTS

சர்வதேச புற்றுநோய் தினத்தையொட்டி தலைமுடி தானம் செய்த பள்ளி மாணவிகள்
X

சர்வதேச புற்றுநோய் தினத்தினையொட்டி பள்ளி மாணவிகள் தலைமுடி தானம் செய்தனர்.

உலகம் முழுவதும் செப்டம்பர் ஏழாம் தேதி சர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு மரணத்தை அதிகம் விளைவிக்க கூடிய இரண்டாவது கொடிய நோயாக புற்றுநோய் விளங்கி வருகிறது.

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு போதிய அளவில் இல்லாததால் இத்தினத்தில் உலக சுகாதார அமைப்பின் அறிவுறுத்தலின் படி நோயின் தாக்கம் மற்றும் தற்போதைய நவீன சிகிச்சை மருத்துவ வசதி உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ளும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந் நாளில் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள பல்லவன் நகரில் செயல்பட்டு வரும் ஸ்ரீலட்சுமி குளோபல் பள்ளியில் சர்வதேச புற்றுநோய் தினத்தையொட்டி முடி தானம் செய்ய முடிவெடுத்து பள்ளி நிர்வாகத்தின் ஆலோசனைப்படி இது குறித்த அறிவிப்பு பள்ளி மாணவ , மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவருக்கும் குறுந்தகவல் அனுப்பப்பட்டது.

பொதுவாகவே புற்று நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தரப்படும் சிகிச்சையினால் அவர்களது தலை முடிகள் உதிர்ந்து அதிக அளவு வளர்ச்சி இல்லாததும் நடைபெறுவது வழக்கம். இதனால் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் தன்னம்பிக்கையை இழக்க இந்த முடி உதிர்தல் செயல் ஒரு நிகழ்வாக அமைகிறது.

இவர்களுக்கு தேவைப்படும் முடிகளை பல்வேறு தன்னார்வல அமைப்புகள் பல்வேறு நபர்களிடமிருந்து பெற்று அவர்களுக்கு அளித்து வருகின்றனர். அவ்வகையில் இப்பள்ளி துணை முதல்வர் காமாட்சி , அவரின் மகள் வர்ஷிதா, பெற்றோர் சத்யா மற்றும் ஜீவித்ஜிவானி உள்ளிட்ட ஐந்து நபர்கள் தங்கள் முடிகளை தானமாக அளித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

இதில் பள்ளி மாணவி இது குறித்து விழிப்புணர்வு பெற்று முழு மனதுடன் அளித்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதில் பெற்றோர் ஒருவர் செய்த செயலும் அனைவருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து பள்ளி முதல்வர் தெரிவிக்கையில் , இப்பள்ளி சார்பாக மாதந்தோறும் பள்ளி மாணவர்கள் நினைவு கொள்ளும் தினமாக முக்கிய தினங்களை கொண்டாடி வருவதாகவும் , இன்றைய தினங்கள் அவர்கள் மனதில் பசுமரத்து அணி போல் பதிந்து அனைவரும் அதன்படி நடந்து கொண்டு செயல்பட உதவும் என தெரிவித்தார்.

முடி தானம் அளித்த துணை முதல்வர் காமாட்சி கூறுகையில் , தனது தாய் மார்பக புற்றுநோய் காரணமாக கடும் சிரமம் கண்டு உயிரிழந்தது தனது மனதை பெரிதும் வருத்தத்தை ஏற்படுத்தியது. புற்றுநோய் தாக்கம் மனிதனை எவ்வாறு பலவீனம் ஆக்கும் என்பதை எனது தாயின் செயல்பாட்டை நேரில் கண்டது, இது போன்ற விழிப்புணர்வுக்கு முன்னுதாரணமாக தான் திகழ வேண்டும் என எண்ணியதும், இதனை எனது மகளுக்கும் எடுத்துரைத்து அவளும் மன மகிழ்ச்சியுடன் முடிதானம் அளித்தது என்னால் மறக்க இயலாத நாளாக அமைந்துள்ளது.

தற்போது புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக அளவில் சென்றடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதும் , இதற்கான நவீன சிகிச்சைகள் தற்போது வந்துள்ளதும் ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

காஞ்சிபுரம் அருகே உள்ள காரப்பேட்டை அறிஞர் அண்ணா அரசு புற்றுநோய் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உலக அளவில் புகழ் பெறும் வகையில் பல கோடி ரூபாய் மதிப்பிற்கு தமிழக அரசால் புதுப்பிக்கப்பட்டு 750 நபர்கள் ஒரே நேரத்தில் சிகிச்சை பெறும் வகையில் அமைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 8 Nov 2022 11:15 AM GMT

Related News