/* */

ஊரக உள்ளாட்சி தேர்தல் : தயார் நிலையில் நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள்

காஞ்சிபுரத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள் 3 ஓன்றியங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

HIGHLIGHTS

ஊரக உள்ளாட்சி தேர்தல் : தயார் நிலையில் நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நடமாடும் கண்காணிப்பு குழு வாகனங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் நடைபெற உள்ளது.இதற்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இந்நிலையில் வாக்குபதிவு முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பார்வையாளர் அமுதவள்ளி தலைமையில் காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில் முதல் கட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அண்ணா காவல் அரங்கத்தில் காவல்துறையினருக்கான நடமாடும் கண்காணிப்பு குழு வாகனம் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு ஒதுக்கீடு பணி துவங்கியது.

காஞ்சிபுரம் , வாலாஜாபாத் உத்திரமேரூர் ஆகிய ஒன்றியங்களுக்கு என 53 நடமாடும் கண்காணிப்பு வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்பு வாகனத்தில் ஒட்டப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் பதிவுபுத்தகம் , இன்ஸ்சூரன்ஸ் நகல் , ஓட்டுநர் உரிமம் ,பர்மிட் உள்ளிட்டவைகள் ஆய்வு செய்யபட்ட பின்பே அனுமதிக்கபடுவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 4 Oct 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!