/* */

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு - கலெக்டர் தகவல்

Chembarambakkam Lake Water Level Today-சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது 100 கன அடி நீர் வெளியேறி வரும் நிலையில் இன்று காலை 10 மணி முதல் 500 கன அடியாக உயர்த்தப்படுகிறது.

HIGHLIGHTS

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 500 கன அடி நீர் திறப்பு - கலெக்டர் தகவல்
X

சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தற்போது நூறு கன அடி நீர் வெளியேறும் காட்சி.

Chembarambakkam Lake Water Level Today-வடகிழக்கு பருவ மழை, கடந்த நவம்பர் 1முதல் துவங்கியது. தமிழகத்தில் 13க்கும் மேற்பட்ட மாவட்டத்தில் வரும் ஐந்து நாட்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது.

அவ்வகையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி கடந்த நான்கு தினங்களாக கன மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வருகிறது.கன மழை பெய்து வருவதால், கடந்த 1,2 ஆகிய இரண்டு நாட்களாக பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடப்பட்டது. தொடர் மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கா வண்ணம், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவான 3645 மில்லியன் கன அடியில், இன்று காலை 2862 மில்லியன் கன அடியாக இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியான திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவான 24 0 அடியில் தற்போது 21.03 அடி நிரம்பியுள்ளது

சென்னை குடிநீருக்காக 108 கன அடி , நீர் வெளியேற்றும் நூறு கன அடி என மொத்தம் 261 கன அடி நீர் டிஸ்சார்ஜ் ஆகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கட்டுப்பாட்டில் உள்ள 381 ஏரிகளில் 32 ஏரிகள் முழு கொள்ளளவையும் 22 ஏரிகள் 75 சதவீத கொள்ளளவு எட்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களில் செம்பரம்பாக்கத்தில் 160 மில்லி மீட்டர் , குன்றத்தூரில் 180 மில்லி மீட்டரும் ஸ்ரீபெரும்புதூரில் 199 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் 105 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

செம்பரம்பாக்கம் சுற்றியுள்ள குன்றத்தூர் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதிகளில், தொடர்ந்து கன மழை பெய்து வருவதும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகம் வருவதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி நீர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் திறக்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 528 ஏரிகளில் 17 ஏரிகள் முழு கொள்ளளவு , 23 ஏரிகள் 75% கொள்ளவையும் எட்டியுள்ளது. இந்நிலையில் இன்றும் மழை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் மாவட்ட தோறும் மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நேற்று முழுவதும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை இல்லாததால் இயல்புவாய்ப்பு மெல்ல திறந்த நிலையில், குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் இன்று காலை 10 மணி முதல் அணையில் இருந்து 100 கன அடி நீர் வெளியேறி வரும் நிலையில், அதனை 500 கன அடியாக உயர்த்தி நீர் வெளியேற்றப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியை சூட்டில் பத்துக்கு மேற்பட்ட கிராம பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவு வைத்துள்ளார் அதேபோல் அரசு அலுவலர்களின் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடவும் அறிவுறுத்துள்ளார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Updated On: 20 April 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?