/* */

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்

பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு  முயன்ற பொதுமக்கள்
X

காலி குடங்களுடன், சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்கள். 

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ளது வளத்தீஸ்வரன் கோயில் தோப்பு தெரு. இங்கு, கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி, ஆட்சியர் அலுவலகம் , நகராட்சி அலுவலகம் என பல முறை புகார் கொடுத்துள்ளனர் .

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால், இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவலன் கேட் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள், ஆண்கள் காலி குடங்களுடன் காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த, விஷ்ணு காஞ்சி போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மேலும், நகராட்சி ஊழியர்களை அழைத்து பேசி அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் ஆட்சியர் அலுவலக சாலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 11 Dec 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்