/* */

காஞ்சிபுரம் : 1,07,934 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க திட்டம்

கட்டுமான பணிக்காக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வந்துள்ள பணியாளர்களின் குழந்தைகளின் எண்ணிக்கை தனியாக கணக்கிடப்பட்டு அவர்களுக்கும் 12 சிறப்பு நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : 1,07,934 குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க  திட்டம்
X

போலியோ என்னும் இளம் பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட கடந்த 22 வருடங்களாக போலியோ சொட்டு மருந்து ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வருகின்ற 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 721 மையங்களில் சுமார் 1,07,934 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த முகாமில் பொது சுகாதாரத்துறை பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர்கள் ஆக மொத்தம் 2,818 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்கா ஆகிய இடங்களில் தனியாக முகாம்கள் அமைக்கப்பட்டு அங்கு வரும் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இளம் பிள்ளைவாத நோயை முற்றிலும் ஒழித்திட போலியோ நோய் நம் நாட்டில் வராமல் காத்திடவும் அனைவரும் ஒத்துழைப்பு நல்கும்படி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 25 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!