/* */

இரவு ஊரடங்கு: பேருந்து நிலையத்தில் உதவிய காவல்துறை

இரவு ஊரடங்கு விதிகளால் பேருந்தை தவறவிட்டு பசியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்தவர்களுக்கு உதவிய காவல்துறை

HIGHLIGHTS

இரவு ஊரடங்கு: பேருந்து நிலையத்தில் உதவிய காவல்துறை
X

காவல்துறை உங்கள் நண்பன் எனும் வார்த்தையும், மனித நேயம் இன்னும் மரிக்கவில்லை போன்ற வாசகங்கள் நிஜ வாழ்வில் உண்டா என்றால், இந்த சம்பவம் உண்டு என கூறும்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இரவு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. இரவு 9 வரை கிராம ,நகர பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்தது. செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் செய்யாறு பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு, இரவு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் வந்தபோது அனைத்து பேருந்துகளும் சென்றுவிட்டதால் கைக்குழந்தைகளுடன் செய்வதறியாது பேருந்து நிலைய வெளியே காத்துக் கிடந்தனர்.

இரவு காவல் பணிக்காக ரோந்து சென்ற காவலர் இவர்களை விசாரித்த போது தங்கள் நிலையை எடுத்துரைத்தனர். அவர்களிடம் உணவருந்த கூட போதிய பணம் இல்லை என அறிந்த காஞ்சிபுரம் நகர காவல்துறையினர் அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் என அனைத்தையும் ஏற்பாடு செய்து , குழந்தைகளுக்கு பிஸ்கட் அளித்து விடியற்காலை முதல் பேருந்தில் அவர்களை அனுப்பி வைத்தனர்.

காவல்துறையின் செயல்பாடுகள் சிலருக்கு வருத்தமளித்தாலும், ஊரடங்கு சூழ்நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோரை வாழ்த்துவோம்.

Updated On: 21 April 2021 8:00 AM GMT

Related News