/* */

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பரசன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் புகைப்பட கண்காட்சி
X

காஞ்சிபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் அன்பரசன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், இன்று தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிகழ்ச்சியில் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு அரசால் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ளும் வகையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளன.


தமிழ்நாடு அரசு ஏழை எளிய கிராமப்புற மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து அவற்றை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்த திட்டங்களான, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம், மக்களைத் தேடிமருத்துவம், உங்களைதேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா, கலைஞரின் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், பன்னாட்டு நிறுவனங்களுடன் புதிய தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தம், முதலமைச்சரின் காலை உணவுதிட்டம், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குதல், மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு கடனுதவிகள் வழங்கியது,

மேலும் முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறித் தோட்டம் திட்டம், இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48 திட்டம், விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்புகள் வழங்கும் திட்டம், கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம், நமக்கு நாமே திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் புகைப்படங்களாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை பொதுமக்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள், திரளாக பார்வையிட்டு, அரசின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து தெரிந்து பயன்பெறுவதற்காக இக்கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 19 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.18,24,209/- மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களும்,4 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4,24,000/- மதிப்பிலான பேட்டரி வீல் சேர்களும் வழங்கி, மாவட்ட தொழில் மையம் சார்பில், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய ஆட்டோக்களையும் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் வழங்கினார்.

Updated On: 12 March 2024 10:42 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  2. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  3. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  4. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  5. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  6. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!
  9. ஈரோடு
    ஈரோட்டில் சணல் பை, பெண்களுக்கான கைப்பை, பணப்பை தயாரிப்பு குறித்த...
  10. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மிதுன ராசிக்கு எப்படி இருக்கும்?