/* */

போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு

தாம்பரம் - செங்கல்பட்டு , பூந்தமல்லி - காஞ்சிபுரம் இடையே போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

போக்குவரத்து நெரிசலை குறைக்க மேல்மட்ட சாலை கேட்டு மத்திய அரசிடம் மனு
X

 218 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை மாதிரி அமைப்பினை பார்வையிட்ட அமைச்சர் எ. வ.வேலு

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் ரூ.218 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு புற்றுநோய் மருத்துவமனைப் பணிகள் விரைவில் நிறைவு பெறும் நிலையில் இருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் கட்டப்பட்டு வரும் அரசு புற்றுநோய் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு , மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் சட்டமன்ற உறுப்பினர் கா சுந்தர் ஆகியோருடன் ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளரிடம் பேசுகையில் ,

பேரறிஞர் அண்ணா நினைவாக காஞ்சிபுரத்தில் அரசு புற்றுநோய் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.வெளி மாநில மாவட்டங்களிலிருந்தும் ஏராளமானோர் இங்கு வந்து குணமடைந்து செல்கின்றனர்.

இடப்பற்றாக்குறை காரணமாக இந்த மருத்துவமனை அருகிலேயே ரூ.118 கோடி மதிப்பில் புதியதாக புற்றுநோய் மருத்துவமனை தரைத் தளத்துடன் கூடிய இரு மாடிகள் தரமான முறையில் கட்டப்பட்டு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.3.50லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுவதற்கு கடந்த 7.7.2020 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.இதில் 500 படுக்கை வசதிகள் அமையவுள்ளது.

புற்றுநோய் பரவல் அதிகரித்துக் கொண்டே போவதால் முன்கூட்டியே தயார் நிலையில் இருப்பதற்காக தற்போது கட்டப்பட்டு வரும் மருத்துவமனையின் மேல் பகுதியில் மேலும் 2 மாடிக் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ. 100 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.

எனவே அந்தப்பணிகளும் விரைவில் தொடங்கப்படும்.மேலும் அமைய இருக்கும் 2 மாடிக் கட்டிடத்தில் 250 படுக்கைகள் உட்பட மொத்தம் 5 மாடிக் கட்டிடத்திலும் சேர்த்து 750 படுக்கை வசதிகள் உடையதாக கட்டப்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே இதுவரை இல்லாத வகையில் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் அதிநவீன கருவிகள்,உணவுக்கூடம் , சலவைக்கூடம், வாகனங்கள் நிறுத்தும் வசதி ஆகியனவும் இம்மருத்துவமனையில் அமைகிறது.

இக்கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கப்பட்டு திறப்புவிழாவை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேல்மட்ட சாலை கேட்டு கடந்த மாதம் டெல்லி சென்றிருந்த போது மத்திய அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்து பூந்தமல்லி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு தாம்பரம் இடையிலான மேல்மட்ட சாலைக்கு அமைக்க வேண்டும் என நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசும் தனது துறை சார்ந்த அலுவலர்களும் இதற்கான அறிக்கையை தயாரித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து மீண்டும் மத்திய அமைச்சரை சந்தித்து சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குனர் வி.சீனிவாசன், நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.மனோகரன் ,பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன், கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர்,செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உட்பட பலரும் உடன் இருந்தனர்.

Updated On: 1 May 2022 2:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...