/* */

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வருட போராட்டம் : பாதுகாப்புக்கு மக்கள் நன்றி..!

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு அறவழியில் போராடிய மக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

HIGHLIGHTS

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு வருட போராட்டம் : பாதுகாப்புக்கு மக்கள் நன்றி..!
X

பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு மக்கள் நன்றி தெரிவித்ததால் நெகழ்ச்சியடைந்த எஸ்.பி சுதாகர் மக்களை கையெடுத்து வணங்கி நன்றியினை ஏற்றுக்கொண்டார்.

அறவழி போராட்டத்துக்கு பாதுகாப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி தெரிவித்ததால் நெகழ்ச்சியடைந்த எஸ்.பி சுதாகர் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து நன்றியை ஏற்றுக் கொண்டார்.


காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் ஏகனாபுரம் உள்ளிட்ட 14 கிராமங்களை இணைத்து இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.

இதற்காக அப்பகுதியில் உள்ள நீர் நிலைகள் குடியிருப்பு பகுதிகள் என அனைத்தையும் கையகப்படுத்த திட்டமிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 365 நாட்களாகும் விமான நிலைய எதிர்ப்பு கூட்டமைப்பினர் இரவு நேரங்களில் போராட்டங்களும் மற்றும் முக்கிய தலைவர்களை அழைத்து கண்டன கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆரம்ப நாள் முதலே அப்பகுதியில் அசம்பாவிதங்களை தவிர்க்க பல்வேறு மாவட்டங்களில் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாள்தோறும் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு காவல் சோதனை சாவடிகள் மூலம் வெளி நபர்களின் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்ட வந்தது.

இந்நிலையில் இவர்களது அறவழி போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் அவ்வப்போது அனுமதி அளித்தும், எவ்வித அசம்பாவிதங்களுக்கும் செல்லக்கூடாது என அவங்க பொது அறிவுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்நிலையில் நேற்று 365 வது நாள் போராட்ட நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிப்பு வெளியானதால் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய எஸ்.பி சுதாகர் வருகை புரிந்தார்.

அப்போது அப்பகுதி மக்கள் அவருக்கு நன்றி தெரிவித்தனர். அதன்பின் அவர் அங்கிருந்து புறப்பட இருந்த நிலையில், ஒலிபெருக்கியில் நிர்வாகிகள் கடந்த ஓராண்டாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தில் எங்களுக்கு அவ்வப்போது அறிவுரைகளை வழங்கி எந்த ஒரு அசம்பாவிதமும் நடைபெறாமல் ஓர் ஆண்டு போராட்டம் நிறைவு செய்வதற்கு காவல்துறை பெரிதும் உதவிய எஸ்.பி சுதாகர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கூட்டமைப்பு சார்பில் கூறினார்கள்.

இதைக்கேட்ட எஸ்பி சுதாகர், காரில் இருந்து உடனடியாக இறங்கி வந்து மக்களை நோக்கி கையெடுத்து வணங்கி நன்றியை தெரிவித்தார். இந்த சம்பவம் மக்களுக்கு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்பி சுதாகரனுக்கு பொதுமக்கள் மீண்டும் நன்றியை தெரிவித்து மகிழ்ந்தனர்.

Updated On: 27 July 2023 5:39 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...