/* */

பத்தாண்டு கால மோடி ஆட்சி சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டு உள்ளார்கள்: எஸ்.ஜி.சூர்யா

காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் பாஜக கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்து செய்தியாளர் விளக்க கூட்டம் மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

பத்தாண்டு கால மோடி ஆட்சி சாதனைகளை மக்கள் அறிந்து கொண்டு உள்ளார்கள்: எஸ்.ஜி.சூர்யா
X

பாஜக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களுக்கு விளக்கி கூறிய பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா உடன் மாவட்ட செயலாளர் பாபு மற்றும் பாஜக நிர்வாகிகள் ருத்ரகுமார்,  வாசன்

இந்திய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதனை தொடர்ந்து ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வேட்பாளர்கள் தொண்டர்கள் மாவட்ட நிர்வாகிகள் என பலரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகளை தேசிய கட்சிகள் கடந்த ஒரு வாரமாக அறிவித்து வெளியிட்டு வருகிறது. அவ்வகையில் பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களுக்கான விளக்கக் கூட்டம் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் எஸ் ஜி சூர்யா கலந்துகொண்டு கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு தமிழகத்தில் மேற்கொண்டுள்ள நலத்திட்டங்கள் குறித்து விளக்கி எடுத்துக் கூறினார்.

மேலும் ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களின் மதிப்பீடு மற்றும் மாநில அரசு செய்ய தவறிய திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

தமிழகத்தில் திமுக செய்த ஊழல்கள் மற்றும் சட்டமன்றத் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் அதனை தவறியது உள்ளிட்டவைகள் அடங்கிய புத்தகங்களை சிறு கையேடுகளாக அனைவருக்கும் இன்னும் இரண்டு தினங்களில் தமிழக முழுவதும் வினியோகிக்க உள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் ஓரிரு தினங்களே உள்ள நிலையில் பொதுமக்களிடம் தேர்தல் வாக்குறுதிகள் எவ்வாறு சென்றடையும் என்று கேட்டபோது, கடந்த 10 ஆண்டு கால ஆட்சியின் செயல்பாடுகளை மக்கள் நன்கு அறிந்து உளளனர் எனவே மூன்றாவது முறையாக மக்கள் பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் எங்களுக்கு இல்லை என்பதும், இருப்பினும் இந்த கையேடு முழுமையாக திமுக ஆட்சியின் அவலங்களும் பாஜக தமிழகத்தில் மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்தும் விளக்கமாக அறிந்து கொள்ளும் வகையில் இவை உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் ருத்ரகுமார் , வாசன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட , நகர , மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 15 April 2024 1:45 PM GMT

Related News