/* */

காஞ்சிபுரத்தில் திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பாண்டவ தூதுவ பெருமாள்

புரட்டாசி நான்காவது சனிக்கிழமையை ஒட்டி பாண்டவ தூதுவ பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் திருப்பதி ஏழுமலையான் அலங்காரத்தில் பாண்டவ தூதுவ பெருமாள்
X

காஞ்சிபுரம் பாண்டவர் தூத பெருமாள் கோவில் தெருவில் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை ஒட்டி திருப்பதி பெருமாள் அலங்காரத்தில் அமைக்கப்பட்ட பெருமாள் 

புரட்டாசியை சனிக்கிழமையொட்டி காஞ்சிபுரம் பாண்டவ தூத பெருமாள் கோவில் சன்னதி தெருவிலுள்ள ஆண் வாரிசுகளுக்கு அதிபதியான ஸ்ரீ பொய்யாமுடி விநாயகர் கோவிலில் தத்ரூபமான வடிவமைப்பில் எழுந்தருளிய திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் வடிவமைப்பு பக்தர்களிடையே ஆனந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் முழுவதும் புரட்டாசி மாதமானது கடந்த மூன்று வாரங்களாக கடைப்பிடிக்கப்பட்டு இன்று கடைசி புரட்டாசி கடைசி வார சனிக்கிழமையானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.இந்த புரட்டாசி கடைசி வார சனிக்கிழமையையொட்டி கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக புகழ்பெற்ற அத்திவரதர் புகழ்பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பெருமாள் திருக்கோவில்,108 திவ்ய‌ தேச திருக்கோவில்களான வைகுண்ட பெருமாள் கோவில்,உலகளந்த பெருமாள் கோவில் போன்ற‌ கோவில்களில் ஏராளமான பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதே‌போல் பல்வேறு இடங்களில் புரட்டாசி கடைசி வார‌ சனிக்கிழமையையொட்டி‌ மாநகர‌ பகுதிகளிலும், கிராம பகுதிகளிலும் உற்சவர் வீதி உலா போன்ற விழாக்களும் நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில் பெரிய காஞ்சிபுரம் பாண்டவ பெருமாள் கோவில் சந்நிதி தெருவிலுள்ள ஆண் வாரிசுகளுக்கு அதிபதியாய் திகழக்கூடிய பொய்யாமுடி விநாயகர் கோவிலில் நான்காம் வார‌ சனிக்கிழமையையொட்டி திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் அலங்காரமானது தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு‌ பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கிறது. நீண்ட நேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத முதியவர்கள் தரிசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி பெருமாள் தரிசனமானது மூன்று நாட்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுமென திருக்கோவில் நிர்வாக தரப்பில் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் வரதராஜ‌ பெருமாள் கோவிலில் உலக புகழ் பெற்ற அத்திவரதர்‌ பெருமாள் வைபவம் 2019-ல் நடைபெற்ற நிலையில், கடந்த கடந்த இரண்டு‌ ஆண்டுகளாக இதே இடத்தில் அந்திவரதர் அலங்காரமானது செய்யப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்காக சயன மற்றும் நின்ற கோலத்தில் வைக்கப்பட்டது. குறிப்பிடதக்கது. காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோயிலில் அதிகாலை முதலில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர் .வெளியூர்களில் இருந்து அதிக அளவில் இன்று பக்தர்கள் குவிந்ததால் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தேவராஜ் சாமியை தரிசித்து சென்றனர்.

இதேபோல் செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள பெருமாள் திருக்கோயில் எம்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள பக்தர்கள் துளசி மாலை உள்ளிட்ட பொருட்களுடன் சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டும், பக்தர்களுக்கு அதிமுக சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. அழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் முழுவதும் மலைகளால் அலங்கரிக்கப்பட்டு எம்பெருமான் சிறப்பு திருமஞ்சனம் கண்ட பின் பக்தர்களுக்கு அதிகாலை முதல் தரிசனம் அளித்தார்.

விளக்கொளி பெருமாள் கோயிலில் எம்பெருமான் சிறப்பு பல வண்ண மலர்களால் சூடி பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் அளித்தார்.இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் அமைந்துள்ள பெருமாள் திருக்கோயில்கள் மற்றும் பஜனை மடங்களில் நான்காவது புரட்டாசி சனிக்கிழமை விழா கொண்டாடப்பட்டு சாமி திரு வீதி உலா நடைபெற்றது.

Updated On: 15 Oct 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...