/* */

திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம்

காஞ்சிபுரம் அடுத்த அய்யங்கார் குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சஞ்சீவிராயர் திருக்கோயில் 4 ஏக்கர் நிலம் நடவாவி கிணறு‌ அருகே அமைந்துள்ளது.

HIGHLIGHTS

திருக்கோயில் நிலத்தில் வனத்தை உருவாக்கும் ஊராட்சி மன்றம்
X

ஐயங்கார்குளம் ஊராட்சி சார்பாக உருவாக்கப்பட்டுள்ள வனத்தில் பட்டுள்ள கன்றுகளுக்கு நீரூற்றும் 100 நாள் வேலை திட்ட‌ பணியாளர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் என்பது தொழிற்சாலைகள் மாவட்டம் என தற்போது விளங்கி வரும் நிலையில், இங்கு மட்டுமில்லாது தமிழகம் முழுவதும் சாலை பணி விரிவாக்கம் எனக் கூறிக்கொண்டு சாலை ஓரம் மரங்களை உள்ள இழந்து வருகிறோம்.

இதற்கு மாற்றாக நெடுஞ்சாலை துறை பணிகள் முடிந்தவுடன் சாலையோர மரங்களை நட முடிவு செய்து 5 லட்சம் மரக்கன்றுகளை பணிகள் முடிந்த இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

மேலும் தொழிற்சாலைகள் புகை வாகனங்களின் புகை என நாள்தோறும் எண்ணிக்கையில் அதிகமாக சுத்தமான காற்று என்பதே தற்போது இல்லாத நிலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உருவாகி வருகிறது.

இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் தொழிற்சாலை புகைகள் மற்றும் குப்பைகள் இருப்பதால் எழும் புகை என அதிக அளவில் இதை மட்டுமே பொதுமக்கள் சுவாசிக்கும் நிலைக்கு மாற்றாக , நல்ல ஆக்சிஜன் காற்றை சுவாசிக்க நடைபயணம் மேற்கொள்வதாகவும் கூறிக்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அரசு வட்டார வளர்ச்சி அலுவலர் மூலம் காலியாக உள்ள தரிசு நிலங்களில் மரக்கன்றுகளை தோட்டக்கலை துறை மூலம் உற்பத்தி செய்து கிராம ஊராட்சிகளுக்கு வழங்க உத்தரவிட்டு உள்ளது.

இது மட்டுமில்லாமல் வீடுகள் தோறும் இலவசமாக இரண்டு மரக்கன்றுகளையும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஊராட்சிகள் மூலம் வழங்கி வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார் குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சஞ்சீவிராயத்தில் கோயிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் எழுந்தருளும் நடவாவி கிணறு அருகே அமைந்துள்ளது.

இந்த இடத்தினை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் சென்று அப்பகுதியை பார்வையிட்டார். அதன்பின் அதன் அருகே உள்ள காலியிடங்கள் குறித்தும் அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர்களிடம் கேட்டறிந்து அவர்களிடம் இப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வனமாக உருவாக்க ஆலோசனை வழங்கி உள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஊராட்சி பொதுமக்கள் ஒத்துழைப்புடன், தோட்டக்கலை துறையுடன் இணைந்து சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் மா பலா கொய்யா நெல்லி நாவல் உள்ளிட்ட பழவகை மரங்களும், தென்னை, புங்கை வேப்பம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களையும் தற்போது நடவு செய்து அதற்கு 100 நாள் திட்ட வேலை பணியாளர்கள் உதவியுடன் பராமரிப்பு பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில், ஆக்கிரமிப்பில் இருந்த திருக்கோயில் நிலம் உரிய ஆவணங்களுடன் மீட்கப்பட்டு தற்போது சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத்துறை உதவியுடன் 750 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க முடிவு செய்து தற்போது இப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இயற்கை சூழலை ஊக்கி வைக்கும் வகையில். மரக்கன்றுகளையும் , பறவை இனங்களுக்காக பழவகை மரங்களும் நடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இது மட்டும் இல்லாமல் பக்தர்களுக்காக 27 நட்சத்திர ஸ்தல விருட்ச மர வகைகளும், மூலிகை செடிகள் இப்பகுதியில் நடவு செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார்.

Updated On: 25 Aug 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...