/* */

காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாளாக அதிரடி வாகன சோதனை: வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்றாவத நாளாக அதிரடி வாகன சோதனை நடைபெற்று வருகிறது. இதில் வடக்கு மண்டல ஐஜி ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் மூன்றாவது நாளாக அதிரடி வாகன சோதனை: வடக்கு மண்டல ஐஜி ஆய்வு
X

காஞ்சிபுரத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் அதிரடி வாகன சோதனையை வடக்கு மண்டல ஐஜி அதிரடியாக ஆய்வு செய்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில், இரு கட்டங்களாக நடைபெற உள்ளது இதில் ஸ்ரீபெரும்புதூர், ஓரகடம்‌ உள்ளிட்ட, அதிக வருவாய் உள்ள பகுதி கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் நபர்களுக்குள், கடும் போட்டி உள்ளது.

இதை கவனத்தில் எடுத்த காவல்துறை, கடந்த பத்து தினங்களாக 100க்கும் மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்தது. அதனை தொடர்ந்து வெளியில் சுற்றிவரும் பல இளம் குற்றவாளிகளை, குடும்பத்தினருடன் அழைக்கப்பட்டு வருவாய் கோட்டாட்சியர் முன்பு, ஓராண்டு நன்னடத்தையாக இருப்பேன்‌ என விதி எண் 110 கீழ் கையெழுத்திட்டனர். ரவுடிகளின் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், நேற்று மாலையில் இருந்து, காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் தலைமையில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் 37 இடங்களில் "DISARMS OPERATION" எனும் பெயரில், மூன்று நாட்களாக திடீர் வாகன சோதனை நடத்தினர். இதில் போக்குவரத்து விதிகளை மீறிய 3267 நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அறிவுறுத்தப்பட்டனர்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் நிறைவு பெறும் வரை, இதுபோன்ற திடீர் வாகனச்சோதனையில் மாவட்ட முழுவதும் ஈடுபட்டு ரவுடிகளை கைது செய்யப்படுவர்; பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை, காவல்துறையினர் உறுதி செய்வர் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் தெரிவித்தார்.

இன்று நடைபெற்ற வாகன சோதனைகளை வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் சந்தோஷ்குமார் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்‌.

Updated On: 30 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  2. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  3. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  5. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  6. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  7. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  10. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...