/* */

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு

தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூ1.2 கோடி மதிப்பில் கட்டபட்ட கட்டிடத்தை முதல்வர் காணொளி மூலம் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

சிவகாஞ்சி காவல்நிலைய புதிய கட்டிடம்: காணொளி மூலம் முதல்வர் திறப்பு
X

புதியதாக ரூபாய் 1.2 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிவகாஞ்சி காவல் நிலைய கட்டிடம்.

காஞ்சிபுரம் நகரத்தில் இரண்டு காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. பெரிய காஞ்சிபுரம் என அழைக்கப்படும் பகுதியை சிவகாஞ்சி காவல் நிலையம் கண்காணிப்பிலும், சின்ன காஞ்சிபுரம் எனும் அழைக்கப்படும் பகுதியை விட்டு காஞ்சி காவல் நிலையம் கண்காணித்து குற்றங்கள் தடுத்தல் , போக்குவரத்து காவல் பணிகள் உள்ளிட்டவைகளை செய்து வருகிறது.

இந்நிலையில் சிவகாஞ்சி காவல் நிலையம் மிகப் பழமையான கட்டிடத்தில் இயங்கி வருவதும் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ப புதிய கட்டிடம் கட்ட காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2020 நவம்பரில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 1.2 கோடி மதிப்பீட்டில் 18 மாத கால அவகாசத்தில் புதிய காவல் நிலைய கட்டிடம் கட்ட பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் சிவகாஞ்சி காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். அதன்பின் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்திய பிரியா மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி காவல் நிலைய பணிகளை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கோட்ட காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர், காவல் ஆய்வாளர் விநாயகம் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!