/* */

ஜூடோவில் தேசிய சாதனையாளரா? காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்…

ஜூடோ போட்டியில் தேசிய அளவில் சாதனைப் படைத்த வீரர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிற்சியாளராக சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஜூடோவில் தேசிய சாதனையாளரா? காஞ்சிபுரம் மாவட்ட பயிற்சியாளராக விண்ணப்பிக்கலாம்…
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. (கோப்பு படம்).

தேசிய அளவில் பதக்கம் வென்ற ஜூடோ (Judo) வீரர் மற்றும் வீராங்கனை பகுதி நேர பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாடு இந்தியா (Khelo India) திட்ட நிதியுதவியில் துவக்க நிலை ஜூடோ (Judo) பயிற்சிக்கான மையம் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் அமைக்கப்பட உள்ளது. இந்த மையத்தில் 30 முதல் 100 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு தினசரி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இந்த மையத்தில் பயிற்சியாளராக பயிற்சி வழங்கிட தேசிய அளவில் சாதனை படைத்த 40 வயதிற்குட்பட்ட ஜூடோ (Judo) வீரர் மற்றும் வீராங்கனை ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். விண்ணப்பதாரர் குறைந்தது ஐந்து ஆண்டுகளாகவும், தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஜூடோ (Judo) விளையாட்டில் சர்வதேச போட்டிகள் அல்லது தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ அல்லது அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்றவராகவோ சர்வதேசப் போட்டிகள் மற்றும் சீனியர் தேசிய போட்டிகளில் கலந்து கொண்டவராகவோ இருத்தல் வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் பயிற்சியாளருக்கு 11 மாதங்களுக்கு மாதாந்திர பயற்சிக் கட்டணமாக ரூ. 18.000 (ரூபாய் பதினெட்டாயிரம் மட்டும்) வழங்கப்படும். இது நிரந்தரப்பணி அல்ல. முற்றிலும் தற்காலிகமானதாகும். இதன் அடிப்படையில் வேலைவாய்ப்பு சலுகைகளோ நிரந்தரப் பணியோ கோர இயலாது.

விண்ணப்பிக்க விரும்புவோர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் (www.sdat.tn.gov.in) ஜனவரி 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பிற வழிகளில் வரும் விண்ணப்பங்கள் எந்தக் காரணம் கொண்டும் ஏற்கப்பட மாட்டாது.

தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறும். உடற்தகுதி, விளையாட்டுத்திறன், இதுவரை பெற்ற பதக்கங்கள், பயிற்சி வழங்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டரங்கம், காஞ்சிபுரம் என்ற முகவரியில் அலுவலக நேரத்தில் நேரிலும், 7401703481 என்ற செல்போன் எண்ணிலும், 044 -27222628 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இந்த வாய்ப்பை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தகுதி வாய்ந்த ஜூடோ (Judo) விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் ஆர்த்தி செய்திக் குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Updated On: 22 Dec 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  2. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  6. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  8. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  9. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  10. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்