/* */

அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் 12,53,264 வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். இதில் 74% ஆண்களும், 69 சதவீத பெண்களும் அடங்கும்.

HIGHLIGHTS

அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
X

வாக்குப்பதிவு மையங்களுக்கு ஆர்வமுடன் வந்து  முதல் முறையாக வாக்களித்த இளம்  வாக்காளர்கள் 

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 1932 வாக்குப்பதிவு மையங்களிலும் பலத்த காவல் பாதுகாப்புடன் துவங்கியது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் காஞ்சிபுரம் உத்தரமேரூர் செய்யூர் மதுராந்தகம் செங்கல்பட்டு திருப்போரூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளது. இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் 8,53,456 ஆன் வாக்காளர்களும் 8 லட்சத்து 95 ஆயிரத்து 107 பெண் வாக்காளர்களும் 33 இதர வாக்காளர்கள் என மொத்தம் 17 லட்சத்து 48 ஆயிரத்து 866 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த இருந்தனர்.

வாக்குப்பதிவுகள் மெல்ல மெல்ல சூடு பிடிக்க துவங்கி இறுதியாக ஆறு மணியளவில் வாக்குப்பதிவுகள் அனைத்தும் நிறைவு பெற்றது. அவ்வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 264 வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.


ஆறு லட்சத்து 31 ஆயிரத்து 984 ஆண் வாக்காளர்களும் ஆறு லட்சத்து 21 ஆயிரத்து 512 பெண் வாக்காளர்களும் 834 இதர வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

ஆண் வாக்காளர்கள் 74.05 சதவீதமும் , பெண் வாக்காளர்கள் 69.43 சதவீதமும், இதர் 33 சதவீதம் என மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 71.66 % வாக்குகள் பதிவாகியது

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பெண் வாக்காளர்கள் விட ஆண் வாக்காளர்கள் 5% அதிகம் பேர் தங்கள் வாக்குகளை செலுத்து உள்ளனர்.

மேலும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் தங்கள் வாக்குகளை வாக்காளர் அடையாள அட்டை காண்பித்து வாக்கு செலுத்தியும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பிற ஆவணங்களை காட்டியும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

Updated On: 20 April 2024 12:45 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!