/* */

காஞ்சிபுரத்தில் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்…

Medical Camp -காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்…
X

சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உள்ளிட்ட அலுவலர்கள் பரிசோதனை  மேற்கொண்டனர்.

Medical Camp -காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் நடந்த ஓராண்டுகளாகவே தொடர் பணிகள் மேற்கொண்டு வந்தனர். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டமாக இருந்த போது தொடர் மழை வெள்ளம் பணிகள் தொடர்ச்சியாக இருந்தது. மேலும், ஏரிகள் நிறைந்த மாவட்டமாக இருந்த நிலையில் தொடர்ச்சியாக பணிகளால் அலுவலர்கள் பரபரப்பாகவே இருந்து வந்தனர்.

தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக பிரிந்த நிலையில் பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வந்தது. இதில் இரண்டு மாவட்ட ஆட்சியரின் அலுவலக கூட்டங்கள், நேரடி ஆய்வுகள், அதன்பின் ஆலோசனைக் கூட்டங்கள், தொடர்ந்து அலுவலர்களுக்கு அறிவுரை என பல நிலைகளில் அரசு அலுவலர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளானர்.

தொடர் பணியில் இருந்ததால் ஊழியர்கள் அதிக அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். பல ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்று செல்லும் நிலைக்கு ஆளானார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் மாரடைப்பால் இறந்தார். இதன் தொடர்ச்சியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் 108 ஆம்புலன்ஸ் ஊர்தி வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

மேலும், அரசு அலுவலர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஊழியர்களுக்கு அனைத்து வகையான மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு சிறப்பு மருத்துவர்கள் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் அரசுப் பணியாளர்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

முகாமினை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தொடக்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியா ராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், சவீதா மருத்துவமனை, மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனை, எம்ஜிஎம்.மருத்துவமனை, சாய் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த சிறப்பு மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலரும் கலந்து கொண்டு இலவசமாக மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். முகாமின்போது, ரத்த பரிசோதனைகள், நுரையீரல், இருதயம், கண், எலும்பு உள்ளிட்ட அனைத்து வகையான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

முகாமில் 65 அரசு மருத்துவர்கள், தனியார் மருத்துவமனையை சேர்ந்த 95 மருத்துவர்கள் உட்பட மொத்தம் 160 மருத்துவர்கள் பங்கேற்று இலவசமாக மருத்துவ ஆலோசனைகளை வழங்கினர். அரசுப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட மொத்தம் 403 பேர் முகாமின் மூலம் பயன்பெற்றனர்.

மருத்துவ முகாம்கள் நடைபெறுவது போன்று அரசு ஊழியர்களுக்கு உளவியல் பயிற்சி மற்றும் மன நல ஆலோசனை பயிற்சிகளும், யோகா உள்ளிட்ட பயிற்சிகளும் வழங்க வேண்டும் என்றும் அதன் மூலம் அரசு ஊழியர்கள் சிறப்பாக பணியாற்ற இயலும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 4 Nov 2022 11:59 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!