/* */

காஞ்சிபுரம் : ஒப்பந்த தொழிலாளர்களிடம் கமிஷன்கேட்கும் மேற்பார்வையாளர்கள்

காஞ்சிபுரம் நகராட்சி ஒப்பந்த தொழிலாளர்களின் மாத ஊதியத்தில் மேற்பார்வையாளர்கள் கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : ஒப்பந்த தொழிலாளர்களிடம் கமிஷன்கேட்கும்  மேற்பார்வையாளர்கள்
X

பைல் படம்

காஞ்சிபுரம் பெருநகராட்சி ஐம்பத்தொரு வார்டுகளை உள்ளடக்கி தூய்மைப் பணி களை மேற்கொண்டு வருகிறது.

காஞ்சிபுரம் பெரு நகராட்சியில் 271 தூய்மைப் பணியாளர்கள் நிரந்தரப் பணியிலும், 350க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து நாள்தோறும் பல லட்சம் டன் திடக் கழிவுகளை சேகரித்து நகரை தூய்மைப் படுத்தி வருகின்றனர்.

நிரந்தர தூய்மை பணியாளர்களுக்கு மாதம் 19 ஆயிரம் சம்பளமாகவும் , ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் ரூபாய் 410 வீதம் வழங்கப்படுவதாக பெருநகராட்சி தெரிவித்துள்ளது.

ஒப்பந்த பணியாளர்கள் வழங்கப்படும் சம்பளத்தில் சில சதவீதம் மேற்பார்வையாளர்களுக்கு கமிஷன் தர வேண்டும் எனவும் நிர்பந்திப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே பெருநகராட்சி அளிப்பதாக கூறும் தினக்கூலியினையே குறைத்து அளிக்கும் நிலையில், சம்பளம் வழங்கும் பணத்திலும் கமிஷன் கேட்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

இதைத் தர மறுக்கும் அலுவலருக்கு பணி அளிக்க மறுப்பதும், மண்டலங்கள் மாற்றி பணி செய்ய சொல்வதும் என மிரட்டல் தொனியில் மேற்பார்வையாளர்கள் பேசுவதாக மன குமுறலுடன் தெரிவிக்கின்றனர்.

இதனை செய்தியாளரிடம் தெரிவித்தால் கூட இவர்களை பழிவாங்கும் நோக்கில் செயல்படுத்துவார்கள் என கூறி ஊழியர்கள் பேசவே அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

நாள்தோறும் நகரை சுற்றி‌ வலம்வந்து தூய்மை செய்யும் நோக்கில் பணி புரியும் இவர்களின் ஊதியத்தில் கமிஷன் கேட்கும் அவலத்தை கை விடுவார்களா மேற்பார்வையாளர்கள் ?

Updated On: 19 Aug 2021 10:15 AM GMT

Related News