/* */

அரசு வழங்கிய காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுக்கொண்ட காஞ்சி கலெக்டர்

தமிழக அரசால் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த 100 ஆக்சிஜன் சிலிண்டர்களை மாவட்ட ஆட்சியர் பெற்றுக்கொண்டார்.

HIGHLIGHTS

அரசு  வழங்கிய காலி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை பெற்றுக்கொண்ட காஞ்சி கலெக்டர்
X

100 காலி ஆக்சிஜன் சிலிண்டர்களை வடகால் சிப்காட் திட்ட இயக்குனர் நளினி, மாவட்ட ஆட்சியரிடம்  ஒப்படைத்தார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பொருத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ள நிலையில் தமிழக அரசு மாவட்டம்தோறும் காலி சிலிண்டர்களை வழங்க உத்தரவிட்டது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 100 காலி செய்யும் நிலை வடகால் சிப்காட் திட்ட இயக்குனர் நளினி மாவட்ட ஆட்சியரிடம், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்படைத்தார்.

இதனை பெற்றுக் கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, 20 சிலிண்டர்களை ஆரம்ப சுகாதார நிலையங்களும் என்பது சிலிண்டர்களை காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஒதுக்கீடு செய்து அதை அனுப்ப உத்தரவிட்டார்.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், தற்போது உயிர்காக்க மிக முக்கியமான உபகரணமாக திகழும் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் கூடுதலாக பெறப்பட்ட சிலிண்டர்கள் முழுவதும் நிரப்பப்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாத வண்ணம் மருத்துவத்துறை செயல்பட்டு நோயாளிகளுக்கு தக்க சமயத்தில் வழங்கும் என்றார்.

Updated On: 29 May 2021 12:45 PM GMT

Related News