/* */

பெண்களுக்கு கலகலப்பான வாக்குறுதி அளித்த காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் வாக்கு சேகரிப்பின்போது பெண்களுக்கு கலகலப்பான வாக்குறுதி அளித்தார்.

HIGHLIGHTS

பெண்களுக்கு கலகலப்பான வாக்குறுதி அளித்த காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர்
X

களக்காட்டூர் கிராமத்தில்  காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற்றால் வீட்டிலிருந்தே நூறு நாள் பணிக்கான ஊதியத்தை பெறலாம் என கூறி பெண்களை கலகலப்பு ஊட்டி கிராம மக்களிடையே வேட்பாளர் ராஜசேகர் மற்றும் முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் வாக்குகள் சேகரித்தனர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து காஞ்சிபுரம் ஒன்றிய அதிமுக செயலாளர் களக்காட்டூர் ராஜூ தலைமையில் இன்று 30 கிராமங்களில் தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்கு சேகரித்தல் நிகழ்வு நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் , அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் கலந்து கொண்டனர்.


வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து பல்வேறு கிராமங்களில் வாக்குகள் சேகரித்து வந்த நிலையில் களக்காட்டூர் பகுதியில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆரத்தி எடுத்து மலர் தூவியும் வேட்பாளரை வரவேற்றனர்.

அதிமுக வேட்பாளர் ராஜசேகர் மூத்த குடிமக்கள் காலில் விழுந்து வாக்குகள் சேகரித்தார். இதைத் தொடர்ந்து குருவி மலை பகுதியில் வாக்குகள் சேகரித்து பேசிய முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் , தாலிக்கு தங்கம் திட்டம் மீண்டும் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் எனவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும் எனவும், தற்போது திமுக இந்த திட்டத்திற்கான பயனாளிகளுக்கு ஊதியம் வழங்கவில்லை எனவும், அதிமுக வெற்றி பெற்றால் 100 நாள் வேலை வாய்ப்பு பயனாளிகள் அனைவரும் எப்போது வேண்டுமானாலும் வேலைக்கு செல்லலாம் ,

மேலும் வீட்டில் இருந்து அதற்கான ஊதியத்தை பெறலாம் எனவும் தெரிவித்ததால் பெண்கள் அனைவரும் சிறிது நேரம் கலகலப்பான மகிழ்ச்சி அடைந்தனர்.

இன்று காஞ்சிபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளர் ராஜசேகர் அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன், ஒன்றிய செயலாளர் களக்காட்டூர் ராஜூ மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என பலர் இணைந்து வாக்குகள் சேகரித்தனர்.

Updated On: 1 April 2024 12:14 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை