/* */

சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை - பயணிகள் வாக்குவாதம்..!

காஞ்சிபுரம் - செங்கல்பட்டு இருவழிப்பாதை இல்லாத காரணத்தால் சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக பயணிகள் குற்றச்சாட்டுகின்றனர்.

HIGHLIGHTS

சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை - பயணிகள் வாக்குவாதம்..!
X

ரயில்வே பாதுகாப்பு காவல்துறையிடம் பயணிகள் தாமதம் குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது

காஞ்சிபுரம் செங்கல்பட்டு இடையே சரக்கு ரயிலுக்கு முன்னுரிமை தருவதால் பயணிகள் ரயில் தாமதமாகுவதாக குற்றச்சாட்டு எழுந்து தற்போது பயணிகள் ரயில் தண்டவாளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே செங்கல்பட்டு வழியாக பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில் சென்று வருகிறது.

திருமால்பூர் டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பயணித்தும் அரசு மற்றும் தனியார் தொழிற்சாலை பணி புரியும் ஊழியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவ சேவைக்காக இந்த பயணிகள் ரயிலை பெரிதும் பயன்படுத்து வருகின்றனர்.


இது மட்டுமில்லாமல் வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரயில் நிலையங்களில் சரக்குகளை கையாள முனையங்களும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் தென்னக ரயில்வேக்கு வருமானங்களாக கிடைத்து வருகிறது.

இந்நிலையில் சரக்கு ரயிலுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் பயணிகள் ரயில்களை நிறுத்தி தாமதப்படுத்தி விடுவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் இன்று 6:15க்கு செல்ல வேண்டிய பயணிகள் ரயில் தற்போது ஏழு மணி வரை செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் பெரும் அவதியுறும் நிலை ஏற்பட்டு பணிகள் மற்றும் மருத்துவத்திற்கு செல்வதில் பெரும் கால தாமதம் ஏற்படுவதாகவும், இதனை தவிர்க்க இரு வழிப்பாதை திட்டத்தை செயல்படுத்தவும், காஞ்சிபுரம் செங்கல்பட்டு இடையே இரு வழிப்பாதை திட்டத்தை உடனடியாக அமல்படுத்தி பயணிகள் விரைவு சேவையை பெற மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

ரயில்வே பாதுகாப்பு காவல்துறையினர் மற்றும் காஞ்சிபுரம் காவல்துறையினர் பயணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின் ஐம்பது நிமிடம் தாமதமாக பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது.

Updated On: 5 March 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!