/* */

வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் 1007 பேருக்கு வீடு, அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்

காஞ்சிபுரம் வேகவதி ஆற்று ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெற்று வருவதாகவும் , 1007 நபர்களுக்கு வசிக்க குடிசை மாற்று வாரிய குடியிருப்பு முதல் கட்டமாக அளிக்கபடவுள்ளதாக தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

வேகவதி ஆக்கிரமிப்பாளர்கள் 1007 பேருக்கு வீடு, அமைச்சர் தா. மோ. அன்பரசன் தகவல்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் அன்பரசன் ஆய்வு மேற் கொண்டார். அருகில் கலெக்டர் ஆர்த்தி.

தமிழக ஊரக தொழில்துறை அமைச்சர் தா .மோ. அன்பரசன் காஞ்சிபுரத்தில் இன்று பல்வேறு இடங்களில் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வில் காஞ்சிபுரம் நகரையொட்டி செல்லும் வேகவதி ஆற்றின் கரையோரம் பொதுமக்கள் ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்தனர்.

பருவமழை காலங்களில் வேகவதி ஆற்றில் நீர் தடைப்பட்டு நகரங்களுக்குள் போகும் நிலையை உணர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.

அவர்களை குடியமர்த்தும் வகையில் மத்தியஅரசு , மாநில அரசு பங்களிப்பு என அனைத்தையும் இணைத்து கீழ்கதிர்பூர் கிராமத்தில் 2112 வீடுகள் கட்டப்பட்டது.

இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது முதல் கட்டமாக 1406 வீடுகள் கணக்கிடப்பட்டு இவர்களுக்கான பயோமெட்ரிக் முறையில் பதிவேற்றம் செய்யப்பட்டது 1007 பேர் தற்போது குடியமர்த்த தயாராக உள்ளதாக தா.மோ.அன்பரசன் தெரிவித்தார்.

இதனை அடுத்து தாலுக்கா அலுவலகம் அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போதிய இட வசதி குறைவு எனும் குறை பாட்டை நீக்க அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை பயன்படுத்த பரிந்துரை செய்ததாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அண்ணா நூற்றாண்டு விழாவின்போது கட்டப்பட்ட பொழுதுபோக்கு பூங்கா தற்போது மீண்டும் சீரமைக்க ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி , நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Updated On: 6 July 2021 9:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!