/* */

ஓரு ஊசி இருந்தா, இன்னொரு ஊசி இல்லை பொதுமக்கள் அலைகழிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தடுப்பூசி முகாம்களில் முன்பதிவு செய்தும் தடுப்பூசிகள் தட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அலைகழிக்க படுவதாக புகார் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

ஓரு ஊசி இருந்தா, இன்னொரு ஊசி இல்லை பொதுமக்கள் அலைகழிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள நீண்ட நேரம் காத்திருக்கும் பொதுமக்கள்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார்.

அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாரத்திற்கு இரு நாட்கள் மட்டுமே தடுப்பூசி தட்டுப்பாட்டால் முகாம் நடைபெறுகிறது

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டால் மட்டுமே பணி வழங்கப்படும் என நிபந்தனையால்

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை சார்பில் நடைபெறும் முகாம்களில் அதிகளவில் தொழிற்சாலை ஊழியர்கள் பங்கு கொள்வதால் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

நேற்று வழங்கப்பட்ட தடுப்பூசி டோக்கனுக்கு இன்று ஊசி இருப்பு இல்லை எனவும் நாளை வாருங்கள் என பொதுமக்களை சுகாதாரத்துறையினர் அலை கழிப்பதால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை நகராட்சி சார்பில் 500 - 800 வரை ஊசி மட்டுமே வழங்கப்படுவதாகவும் அதற்காக பத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் வைப்பதால் காலை 6 மணி முதலே தடுப்பூசிக்காக முதியோர்கள் காத்துக்கிடக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தட்டுப்பாடுகள் இருந்தாலும் பொதுமக்களை முகாம் என்ற பெயரில் அதிக மன உளைச்சலுக்கு தள்ளப் படுகிறடுகின்றனர். காஞ்சி மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை உள்ளது.

Updated On: 21 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!