/* */

குளத்தை காணவில்லை என விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்

குளத்தை காணவில்லை என காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.

HIGHLIGHTS

குளத்தை காணவில்லை என  விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் புகார்
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.

காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கில் ஆட்சியர் மா.ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இதில் விவசாயிகள் தங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தனர். மேலும் விவசாய துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு பல்வேறு விவசாய நலன் சார்ந்த அறிவுரைகளை வழங்கினர்.

இந்நிலையில் தென்னேரி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்த யோகானந்தம் என்பவர் பேசுகையில் , விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் பார்க்கும் போது அதற்குரிய விவசாய கடன் கிடைப்பது பெரிய சிக்கல் உள்ளதாகவும் அதனால் அது குறித்து கிராம நிர்வாக அதிகாரி உரிய நில உரிமையாளரிடம் விசாரித்த பின் அவருக்கு கடன் அளிக்க பரிந்துரை செய்ய ஆட்சியர் அறிவுரை கூற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் தமது கிராமத்தில் சிறுவயதிலிருந்தே விளையாடி வந்த கஸ்தூரி குளம் எனும் குளம் தற்போது ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு குளம் தூர்க்கப்பட்டது. உடனடியாக வருவாய்த்துறை அதை ஆய்வு செய்து ஆக்கிரமிப்பிலிருந்து மீண்டும் குளம் பயன்பாட்டிற்கு எடுத்து நீர் சேமிக்க வழி வகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

சினிமா பட பாணியில் போல் விவசாயிகள் அக்கூட்டத்தில் குளம் காணவில்லை என கூறியதால் ஆட்சியர் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

Updated On: 25 March 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...