/* */

வாக்களிக்க வேண்டும் கூறியதை ஏற்க மறுத்த ஏகனாபுரம் கிராம மக்கள்

பசுமை விமான நிலைய திட்டத்தை எதிர்த்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என தேர்தல் புறக்கணிப்பு அறிவித்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள்.

HIGHLIGHTS

வாக்களிக்க வேண்டும் கூறியதை ஏற்க மறுத்த ஏகனாபுரம் கிராம மக்கள்
X

ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் புறக்கணிப்புக்கான காரணத்தை தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திராவிடம் தெரிவித்த போது

வாக்களியுங்கள் எனக் கூற சமரசக்குழு மட்டுமே வந்ததாகவும், தங்கள் கோரிக்கையைப் பற்றி செவி சாய்க்க மறுத்ததாகவும் , தொடர் தேர்தல் புறக்கணிப்பு நடைபெறும் என ஏகனாபுரம் ஒருங்கிணைப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், காஞ்சிபுரம் அடுத்த ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் அமைய உள்ள இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் தேர்தல் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர்.

ஏற்கனவே 626 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் நடத்தி வந்த நிலையில், நேற்று மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு சேகரிக்க வந்த அலுவலர்களையும் வாக்களிக்க மாட்டோம் என அக்கிராம வாக்களார்கள் திருப்பி அனுப்பினர் .

இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையர் சத்திய பிரகாஷ் சாகு ஏகனாபுரம் கிராம பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் சந்தித்து தேர்தலில் வாக்களிக்க சமாதான பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவித்தார்.

அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா, ஆட்சியர் கலைச்செல்வி, எஸ்.பி.சண்முகம் ஆகியோர் ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டக் குழு மற்றும் பொதுமக்களை சந்தித்தனர்.

தேர்தல் பார்வையாளர் அபிஷேக் சந்திரா அவர்களிடம் பேசுகையில், தேர்தலில் வாக்களிப்பது உங்களது உரிமை எனவும் அதை தவறவிடக்கூடாது எனவும், வாக்களிக்காமல் விட்டால் எந்த நன்மை கிடைக்கும் என நினைக்கிறீர்கள் என கேட்டார்.

அதற்கு பதில் அளித்த குழுவினர் வாக்களித்தால் மட்டும் என்ன நடக்கப் போகிறது என கேட்டு அவர்களுடன் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இறுதியாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் மீண்டும் ஒரு முறை ஆட்சியை தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதன்பின் போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணி கூறுகையில் , அவர்கள் எங்களது கோரிக்கை குறித்து எந்தவித பதிலும் அளிக்காமல் வாக்களிக்க வேண்டும் என்று கூறும் ஒரே குறிக்கோளுடன் வந்ததாகவும், இதில் எங்களுக்கு எந்த வித திருப்தியும் இல்லாத நிலையில் புறக்கணிப்பு தொடரும் எனவும் ஆட்சியருடன் பேச்சுவார்த்தைக்கு தயார் இல்லை எனவும் தெரிவித்தனர்.

Updated On: 11 April 2024 2:30 PM GMT

Related News