/* */

வேட்பாளருடன் சுற்றுவதை நிறுத்திவிட்டு வாக்காளரை சந்தியுங்கள்..!

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் போட்டியிடுகிறார்.

HIGHLIGHTS

வேட்பாளருடன் சுற்றுவதை நிறுத்திவிட்டு வாக்காளரை சந்தியுங்கள்..!
X

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அறிமுகப்படுத்தி நடைபெற்ற காஞ்சி சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகள் கூட்டத்தில் பாஜக மாவட்ட தலைவர் பாபு உரையாற்றியபோது

வேட்பாளருடன் சுற்றுவதை தவிர்த்து விட்டு வாக்காளரை சந்தியுங்கள் என காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் , தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசன் அவர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் காஞ்சிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் பாமக மாவட்ட செயலாளர் மகேஷ் மற்றும் பாஜக மாவட்ட தலைவர் பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளான பாஜக தமாக, ஐஜேகே, அமமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் அனைவரும் ஒருங்கிணைந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை பெறுவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.


குறிப்பாக பிரசார பயணத்தின் போது வேட்பாளர்களுடன் சுற்றுவதை தவிர்த்து விட்டு கிராமங்கள் தோறும் கூட்டணியினர் ஒருங்கிணைந்து வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் பெறும் நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடப்பட்டது.

நிலையான இந்தக் கூட்டணி வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடர்ந்து நீடிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினரை பெற வேண்டும் என ஒருமித்த கருத்தாக கூறப்பட்டது.

இக்கூட்டத்தில் தமாக நகர தலைவர் சுகுமார் , அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி வரலட்சுமி , ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ஆர் வி ரஞ்சித் குமார் , ஐ ஜே கே காஞ்சி மாவட்ட செயலாளர் , புதிய நீதி கட்சி , இந்து மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2024 11:30 AM GMT

Related News