/* */

பல்வேறு ஒன்றியங்களில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!

காஞ்சிபுரம் நகரம் , வாலாஜாபாத் வடக்கு, காஞ்சிபுரம் தெற்கு உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாவட்ட செயலாளர் சுந்தர் தலைமையில் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பல்வேறு ஒன்றியங்களில் திமுக நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுகக் கூட்டம்!
X

காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற அறிமுக விழாவில் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் அறிமுகப்படுத்தப்பட்ட போது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலில் தற்போதைய எம்பி ஆக உள்ள க. செல்வத்தையே மீண்டும் திமுக சார்பில் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார்.

திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ சிவிஎம்பி. எழிலரசன் முன்னிலையில், வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர்

படுநெல்லி பி.எம்.பாபு தலைமையில், பரந்தூர் பகுதியில் ஒன்று கூடிய ஒன்றிய நிர்வாகிகள், கிளைக் கழக நிர்வாகிகள், உள்ளிட்டோரை நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து, சால்வை அணிவித்து ஆதரவு திரட்டினார்.


திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள எம்பி க.செல்வத்தை திமுக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து சால்வை அணிவித்து உற்சாகத்துடன் வரவேற்று வாழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர் கே தேவேந்திரன்,ஒன்றிய நிர்வாகிகள் பழனி,கவிதா டில்லிபாபு, வெங்கட்ராமன்,மாவட்ட பிரதிநிதிகள் பார்த்திபன், ஆறுமுகம், திருஞானசம்பந்தம்,ஒன்றிய கவுன்சிலர்கள் உலகநாதன், லோகு தாஸ், கொளரி தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், மற்றும் ஏராளமான உள்ளாட்சி பிரதிநிதிகளும் கட்சியை நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போல் காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன் தடைமையில் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் எம் எல் ஏ சுந்தர் நாடாளுமன்ற உறுப்பினரை அறிமுகப்படுத்தி வாக்குகள் சேகரித்தார்.


இதே போல் காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிய செயலாளர் குமணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , நாடாளுமன்ற வேட்பாளர் செல்வம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்சி நிர்வாகிகளிடையே வாக்குகள் சேகரித்தார்.

இதே பல் உத்தரமேருர் , சாலவாக்கம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் அறிமுக கூட்டம் நடைபெற்றது

Updated On: 22 March 2024 1:00 PM GMT

Related News