/* */

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 12 வார்டு திமுக வேட்பாளர் தேவராஜ் வெற்றி பெற்று முதலிடம்

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சியில் அதிக  வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்
X

12 வார்டில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் தேவராஜன்.

நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு 50 வார்டுக்கான தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிந்து வெற்றி அறிவிக்கப்பட்டது. இதில் 50 வார்டுகளில் பலர் 100 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

ஆனால், 12 வார்டுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த தேவராஜன் 2758 வாக்குகளும், ஆனந்தன் 1025 வாக்குகளும் பெற்றனர். இதில் 1733 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில்‌ அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Feb 2022 6:00 AM GMT

Related News