/* */

இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குசாவடிகளை டிஐஜி சத்யபிரியா ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதட்டமான வாக்குச்சாவடிகளை டிஐஜி எம் சத்தியபிரியா ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை துவங்கியது. ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஒன்றியங்களில் நடைபெறுகிறது .

இதற்காக 601 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. குன்றத்தூர் ஒன்றியம் காஞ்சிபுரம் காவல் மாவட்டத்திலும் 22 வாக்குச்சாவடிகளும், சென்னை காவல் சரகத்தில் 88 வாக்குசாவடிகளில் என 110 பதட்டமான வாக்குச்சாவடிகளும் , ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் 66 பதட்டமான வாக்குசாவடிகள் உள்ளன.

இத்தேர்தலானது அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் பொருட்டு காவல்துறை சார்பில் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர், 4 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 14 காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1911 காவலர்கள் மற்றும் ஊர்காவல்படையினர் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பட்டு பல்வேறு தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மண்டல சரக காவல்துறைத் துணை தலைவர் எம்.சத்யபிரியா இரு ஒன்றியங்களில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளை ஆய்வு செய்து வருகிறார்.

இதேபோல் காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் உள்ளிட்ட காவல்துறையினர் சுழற்சி முறையில் தொடர் ஆய்வு செய்து வருகிறார்.

Updated On: 9 Oct 2021 10:17 AM GMT

Related News