/* */

கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கட்டுமான பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வலியுறுத்தி கட்டுனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றத்தை தடுக்க வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம்
X

காஞ்சிபுரத்தில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  அகில இந்திய கட்டுனர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர். 

கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரியும், ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் காஞ்சிபுரம் கட்டிட பொறியாளர் சங்கம், காஞ்சிபுரம் வர்த்தகர் சங்கம், இந்திய தேசிய கட்டிட தொழிலாளர் பேரவை, தமிழக கட்டிட தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட 10 சங்க அமைப்பினர் 100க்கும் மேற்பட்டோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கடந்த 6 மாத காலமாக கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் கடும் உயர்வைக் கண்டுள்ளது. இதனை மத்திய மாநில அரசுகள் ஒழுங்குமுறை ஆணையம் அமைத்து கட்டுப்படுத்தி சாமானிய மக்களும் வீடு கட்டும் திட்டத்தில் பங்கேற்க வழிவகுக்க வேண்டும் .இதனால் பல்வேறு பிரிவுகளைச் சார்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் வழிவகை செய்யும் என வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம் சாண்ட் விற்பனை விவகாரத்தில் டிராண்ஸ்ஸிட் பாஸ் பிரச்னையால் தட்டுபாட்டு ஏற்பட்டுள்ளது.. இதனால் மாவட்டத்தில் 50 சதவீத கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 26 Oct 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?