/* */

12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் 1932 வாக்குப்பதிவு மையங்கள் நாடாளுமன்ற தேர்தலுக்காக அமைக்கப்பட்டது.

HIGHLIGHTS

12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
X

வாக்குப்பதிவு நிறைவு பெற்றபின் எடுத்துவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட வருவாய்த்துறை ஊழியர்கள்

காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை சரியாக ஏழு மணிக்கு துவங்கி மாலை 6:00 மணி வரை நடைபெற்றது. இதற்கு முன்பாக அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து வாக்கு சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முறையாக குறித்த நேரத்தில் அனுப்பப்பட்டு அதற்கான உபகரண பொருட்களும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பாகவே ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த சட்டமன்றத் தொகுதி காப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டு அங்கிருந்து வாக்குப்பதிவு மையங்களுக்கு காவல்துறை பாதுகாப்புடன் மண்டல அலுவலர்கள் எடுத்துச் சென்றனர்.


இந்நிலையில் வாக்குப்பதிவு நேற்று 6:00 மணிக்கு முடிவு பற்ற பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவி பேட் என அனைத்தும் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டு மண்டல அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள பொன்னேரிகரை பகுதியில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா அரசு உறுப்புக்கல்லூரியில் ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனி காப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சட்டமன்ற தொகுதிகளுக்கு செல்லும் வாகனங்களுக்கும் தனித்தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று அம்மையத்தில் அமைத்துள்ள வரவேற்பு குழுவிடம் மண்டல அலுவலர்கள் தாங்கள் எடுத்து வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் சரியாக ஒப்படைத்தனர்.

இரவு 9 மணிக்கு மேல் மெல்ல மெல்ல வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்து வந்த வாகனங்கள் வரத்து துவங்கிய நிலையில் ஒவ்வொன்றாக சரிபார்க்கப்பட்டு வந்த நிலையில் தொடர்ச்சியாக காலை 9 மணி வரை சரிபார்க்கும் பணி தொடர்ந்து தொய்வின்றி வருவாய்த்துறை அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சரிபார்க்கும் பணியை கண்காணிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், வருவாய் கோட்டாட்சியர் கலைவாணி, தேர்தல் வட்டாட்சியர் தாண்டவமூர்த்தி, வட்டாட்சியர் புவனேஷ்வரன் , கருணாகரன் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலர்களும் தொடர்ந்து அவர்களுக்கு ஊக்கமளித்து தொடர் பணியில் அனைவரும் ஈடுபட்ட நிலையில் எந்தவித சலசலப்புமின்றி அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் காலை 10 மணி அளவில் சரிபார்க்கப்பட்டு அந்தந்த காப்பாரில் வைக்கப்பட்டு பணிகள் இறுதி செய்யப்பட்டது.

கடந்த இரு நாட்களாக தொடர்ச்சியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் மணி முதல் அதனை திரும்பப் பெறும் பணி வரை தொடர்ச்சியாக தொய்வின்றி பணிகளை மேற்கொண்டு எந்தவித சச்சரவுகளுக்கும் இடமளிக்காமல் பணியாற்றியது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்லாது ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற அனைத்து வழிகளிலும் வருவாய் துறை சிறப்பாக செயல்பட்டது.

Updated On: 20 April 2024 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!