/* */

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் குறட்டை விடும் நுகர் பொருள் மண்டல அலுவலகம்..!

தேர்தல் தேதி அறிவித்த 24 மணி நேரத்தில் நன்னடத்தை விதிகளை பின்பற்றி பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் குறட்டை விடும் நுகர் பொருள் மண்டல அலுவலகம்..!
X

தேர்தல் விதிகளை முறையாக கடைப்பிடிக்காத காஞ்சிபுரம் நுகர் பொருள் வாணிப மண்டல அலுவலகம்.

இந்திய நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் நேற்று மாலை 3 மணிக்கு அறிவித்து அது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததாக அறிவித்து பல்வேறு தேர்தல் நன்னடத்தை விதிகள் குறித்து விளக்கம் அளித்தார்.

அவ்வகையில் தமிழகத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் முதல் கட்டத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வேட்பு மனு பெறுதல் , வேட்பு மனு தாக்கல், பரிசீலனை திரும்ப பெறுதல் என பல்வேறு நிலைகள் குறித்த கால அட்டவணையும் வெளியிட்டுள்ளது.

மேலும் நேற்று மாலை 3 மணி முதலே தேர்தல் நன்னடத்தை விதிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரம் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாது தேர்தல் நன்னடத்தை விதிகளில் முதல் கட்டமாக தமிழக அரசின் செயல் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் மற்றும் பதாகைகள் உள்ளிட்ட அனைத்தையும் அகற்றப்பட்டது. அரசு அலுவலகங்களில் உள்ள முதல்வர் படம் உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டு இதுகுறித்து பிற அரசு அலுவலகங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டது.!


90 சதவீதத்திற்கு மேல் அலுவலகங்களில் உள்ள அரசு சாதனைகள் மற்றும் முதல்வர் படம் உள்ளிட்டவைகள் அகற்றப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அடுத்த செவிலிமேடு அருகே செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு நுகர் பொருள் வாணிப மண்டல அலுவலகத்தில் முதல்வரின் சாதனைப்பதாகைகள் தற்போது வரை தொங்கவிடப்பட்டு உள்ளது.

தேர்தல் விதிகள் செயல்படுத்த 24 மணி நேரம் கால அவகாசம் உள்ள நிலையில் 18 மணி நேரத்துக்கு மேல் ஆகி தற்போது வரை இதை செயல்படுத்தாமல் அரசு அலுவலர்கள் அலட்சியப்படுத்தி உள்ளனர். இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் அரசு அலுவலகங்களுக்கு அலுவலகங்கள் வருவது இல்லை என்பதும், இதை உரிய முறையில் அகற்றப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Updated On: 17 March 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!