/* */

ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலமாக தீர்வுத் தொகையாக ரூ.2.55 கோடி மாவட்ட நீதிமன்றம் வழங்கியது.

HIGHLIGHTS

ஒரே நாளில்  288 வழக்குகளுக்கு சமரசத்தீர்வு, ரூ.2.55 கோடி தீர்வுத்தொகை வழங்கப்பட்டது
X

பயனாளிக்கு தீர்வுத் தொகைக்கான உத்தரவு நகலை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன். உடன் நீதிபதிகள்

காஞ்சிபுரம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்ததார்.

தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்னிலை வகித்தார்.சட்டப் பணிகள் குழுவின் தலைவர் திருஞானசம்பந்தம் வரவேற்றார்.

மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 432 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 288 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2,55,45,350 தீர்வுத் தொகையாகவும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

தொடக்க விழாவில் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ராஜேஸ்வரி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சரண்யா செல்வம், நீதிபதிகள் செந்தில்குமார்,சரவணக்குமார் உள்பட நீதிபதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் மாவட்ட நீதிபதி ஜெ.சந்திரன் நட்டார்.

Updated On: 10 July 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!