/* */

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் பசு கோசாலை உரிமையாளர் மீது புகார்

Kanchipuram News in Tamil -காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் பசு கோசாலை உரிமையாளர் மீது அதிமுக கவுன்சிலர் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் பசு கோசாலை உரிமையாளர் மீது புகார்
X

காஞ்சிபுரம் மாநகராட்சியின் அவசரக் கூட்டம்  மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில்  நடைபெற்றது.

Kanchipuram News in Tamil -நாளை தமிழகமெங்கும் அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் நகர சபை கூட்டங்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை மேயர் குமரகுருநாதன், ஆணையர் கண்ணன், மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் ஆரம்பித்தவுடன் அரசு அறிவுரையின்படி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டு, நாளை நடைபெற உள்ள நகர சபை கூட்டங்கள் குறித்து சந்தேகங்களை அ.தி.மு.க. மாமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர்.

மேலும் மாமன்ற உறுப்பினர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினை நியமிப்பது யாருடைய உரிமை என்பது குறித்து சற்று நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.

இது குறித்த விளக்கங்களை மாநகராட்சி ஆணையர் கண்ணன் மாமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கினர்.ஒவ்வொரு மாமன்ற வார்டு பகுதியிலும் ஐந்து உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுடன் 20 பேர் இணைந்து இக்குழு உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இது குறித்த உறுப்பினர் பட்டியல்களை மாமன்ற உறுப்பினர்கள் அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து விரிவாக மாநகராட்சியில் மண்டல குழு தலைவர் வழியாக ஒப்படைக்க வேண்டும் எனவும் அதன் பிறகு அதனை பரிசீலித்து வார்டு வாரியாக நகர சபை குழு உருவாக்கப்படும். இவை அனைத்தும் அரசு வழிகாட்டி முறையில் நடைபெறும் எனவும் இதில் எந்த தவறும் நேராது எனவும் கூறப்பட்டது.

இதனிடையே மாமன்ற உறுப்பினர் சண்முகநாதன், காஞ்சிபுரம் மாநகராட்சி சாலைகளில் சுற்றித்திரிந்த பசுக்களை மாநகராட்சி சார்பில் பறிமுதல் செய்யப்பட்டு அதனை சுகாதார ஆய்வாளர் துணையுடன் விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்து வருவதாகவும் இதுகுறித்து மாமன்றத்தில் ஆணையர் விளக்கம் அளிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதற்கு பதில் அளித்த ஆணையர் இதற்கான பதிலை தன்னுடைய அறையில் விளக்கம் அளிப்பதாக தெரிவித்ததை ஏற்க மறுத்து மாமன்ற கூட்ட அறையிலேயே இது குறித்து தெரிவிக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும் இது குறித்து பதில் ஏதும் தரவில்லை.

இந்த பசு பறிமுதல் விஷயத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பசுமாடுகள் பசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டதாகவும், அதில் சில மாடுகளை சுகாதார ஆய்வாளருடன் விற்பனை செய்வது தெரிய வந்துள்ளதாகவும், பசு காப்பக உரிமையாளர் மீது புகார் செய்து வழக்குப் பதிய உள்ளதாகவும் இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்பட்டது.

வரும் மாமன்ற கூட்டத்தில் இந்த பிரச்சனை பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் என அ.தி.மு.க.சார்பில் கூறப்படுகிறது. இதேபோல் வார்டு வாரியாக நகர சபை உறுப்பினர்கள் குழு தேர்வு , ஆளும் கட்சிக்கு சாதகமான நபர்களையே தேர்வு செய்வதாகும் என கூறி அ.தி.மு.க. த.மா.கா, பா.ஜ.க. உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 10:58 AM GMT

Related News