/* */

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் சாம்பியன் பட்டம்: கலெக்டர்பாராட்டு

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 17 மாநிலங்களை சேர்ந்த 800-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

HIGHLIGHTS

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்  சாம்பியன் பட்டம்: கலெக்டர்பாராட்டு
X

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் ஒட்டுமொத்த குழு சாம்பியன் பட்டத்தை வென்ற காஞ்சி குழுவினரை ஆட்சியர் ஆர்த்தி  பாராட்டினார்.

சிலம்பம் எனும் கலை தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று. இந்த தற்காப்பு கலையை தற்போது அனைத்து வயதினரும் கற்று வருகின்றனர்.

குறிப்பாக கல்வி பயிலும் இளம்பருவத்தினர் தற்போது சிலம்பம் கலையை பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கல்வி கற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று வருவதால் இதில் அதிக அளவில் மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

குறிப்பாக பெண்களின் 60% தங்கள் பாதுகாப்பு கருதி இந்த சிலம்பம் போட்டியை ஆர்வமுடன் கற்று வருவது மீண்டும் தமிழரின் வீர விளையாட்டான சிலம்பத்தை கற்பது உலக அளவில் உணர்த்தும் வகையில் உள்ளது.

மேலும் இதனை ஊக்குவிக்கும் வகையில் வட்ட அளவில் தொடங்கி தேசிய அளவில் வரை போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தங்களது கல்வி வேலை வாய்ப்பு முன்னுரிமை பெற இது பெரிதும் உதவுகிறது.

அவ்வகையில் பேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த 14ஆம் தேதி டெல்லியில் உள்ள எம் கே சி எஸ் ஸ்போர்ட்ஸ் வளாகத்தில் துவங்கியது தமிழகம் , கேரளா, ஆந்திரம் , தெலுங்கானா , கர்நாடகா உள்ளிட்ட 17 மாநிலங்களை சேர்ந்த 800 வீரர் வீராங்கனைகள் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போ போட்டிகள் நான்கு வயதுவரம்பு குழுக்களாக பிரிக்கப்பட்டது. ஐந்து முதல் பத்து வரையும், 11 முதல் 15 வரையும் , 16 இல் இருந்து 20 வரையும் , 21லிருந்து 25 வரை சூப்பர் சீனியர் பிரிவு என்ற முறையில் குழுக்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது.

இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஸ்வின் சிலம்பாட்ட குழுவின் சார்பாக 16 பெண்கள் 29 ஆண்கள் என மொத்தம் 45 பேர் பயிற்சியாளர் அஸ்வின் மற்றும் பாபு தலைமையில் இப் போட்டியில் பங்கேற்றனர்.

தொடு முறை தனித்திறமை என பல பிரிவுகளின் கீழ் நடைபெற்ற போட்டியில் இக்குழு 33 தங்கம் 4 வெள்ளி 11 வெண்கலம் என 48 பதக்கங்களை வென்றது.

இதன் மூலம் இப் போட்டியில் சிறந்த குழுவாக தேர்வு செய்யப்பட்டு ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை வென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட சர்வதேச அளவிலான போட்டியில் பங்கேற்க இக்குழுவில் இருந்து வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பதக்கங்களை வென்று காஞ்சிபுரம் திரும்பிய இக்குழுவினருக்கு புதிய ரயில்வே நிலையத்தில் பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை அணிவித்து உற்சாக நடனமாடி பெற்றோர்கள் உறவினர்கள் என பலர் வரவேற்றனர்..

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் ஆட்சியை சந்தித்து காஞ்சிபுரம் குழு ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்ற கோப்பையுடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரைய்யா ,. மாநகராட்சி மண்டல குழு தலைவர் செவிலிமேடு மோகன், பயிற்சியாளர்கள் எஸ்.பாபு , பி.அஸ்வின், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Oct 2022 4:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை