/* */

திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு: விசிக பிரமுகர் மனைவி சுயேச்சையாக போட்டி

காஞ்சிபுரம் மாநகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விசிகவிற்கு கூடுதல் இடம்‌ ஓதுக்காததால் திமுகவிற்கு எதிராக போட்டி.

HIGHLIGHTS

திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு: விசிக பிரமுகர் மனைவி சுயேச்சையாக போட்டி
X

46 வது வார்டு விசிக பிரமுகர் டேவிட் மனைவி அகிலாண்டேஸ்வரி டேவிட் மாநகராட்சி தேர்தல் அலுவலர் குமாரியிடம் மனு அளித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் காஞ்சிபுரம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகியவைகளுக்கு நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. இதுவரை 34 நபர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிகவிற்கு மாநகராட்சி பகுதியில் 19 வார்டு ஓதுக்கபட்டது. இந்நிலையில் எஸ்சி பிரிவினருக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை வழங்க மறுத்துள்ளது. இதில் அதிருப்தியடைந்த விசிகவினர் பலர் சுயேச்சையாக தாக்கல் செய்கின்றனர்.

அவ்வகையில் 46 வது வார்டு பகுதியில் வசிக்கும் ஒன்றிய செயலாளர் டேவிட் அவர்களின் மனைவி அகிலாண்டேஸ்வரி டேவிட் இன்று மாநகராட்சி தேர்தல் அலுவலர் குமாரியிடம் மனு அளித்தனர்.

திமுக வேட்பாளர் லைலாகாண்டீபன் என்பவரை எதிர்த்து விசிக வேட்பாளர் நிறுத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலித்களுக்காக போராடும் விசிகவிற்கு அப்பகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க மறுப்பதால் இதுபோன்ற நிலை என தெரிகின்றனர்.

Updated On: 2 Feb 2022 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...