/* */

பெண் நெசவாளர்களுக்கு புற்றுநோய் மகளிர் மருத்துவம் விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் அண்ணா பட்டு பூங்காவில் பணியாற்றும் பெண் நெசவாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பெண் நெசவாளர்களுக்கு புற்றுநோய் மகளிர் மருத்துவம் விழிப்புணர்வு முகாம்
X

காஞ்சிபுரத்தில் பெண் நெசவாளர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் கிராமத்தில் அண்ணா பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு தனியார் பட்டு சேலை உற்பத்தியாளர்கள் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணி நியமணம் செய்துள்ளனர்.

குறிப்பாக அதிக அளவில் பெண் நெசவாளர்கள் பணியில் ஈடுபட்டு பட்டு சேலை நெசவு செய்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களது உடல் நலம் காப்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்த இன்ஃபினிட்டி ரோட்டரி கிளப் திட்டமிடப்பட்டு மூன்று நாள் மருத்துவ விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் துவக்கவிழா இன்று பட்டுப் பூங்கா வளாகத்தில் இன்பினிடி ரோட்டரி கிளப் தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மலர்கொடி குமார், சென்னை தனியார் புற்றுநோய் விழிப்புணர்வு நல மையத்தில் செவிலியர் மேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் மகளிர் பொது மருத்துவம் மற்றும் புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கடந்த காலங்கள் போல் புற்றுநோய்க்கு தற்போது அதிநவீன சிகிச்சை கருவிகளும் மருத்துவர்களும் ஆரம்ப காலத்திலேயே அதனை கண்டறிந்து சிறப்பான சிகிச்சை அளித்து வருகின்றனர்.

எனவே புற்றுநோய் குறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை என்பதும் புற்றுநோய் வராமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதை சிறப்பாக எடுத்துரைத்தனர்.

இந் நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் நெசவாளர்கள் கலந்து கொண்டு தங்களுக்கான மருத்துவ சந்தேகங்களை கேட்டு அறிந்தனர்.நாளை மோனோ கிராம் மருத்துவப் பரிசோதனை முகாம் அதனைத் தொடர்ந்து பெண்கள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர் பி. எம். குமார் மற்றும் தனியார் நிறுவன பட்டு உற்பத்தியாளர்கள் , ரோட்டரி சங்க உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 20 April 2022 10:45 AM GMT

Related News