/* */

காஞ்சிபுரம் பள்ளியில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பாரதியார் விழிப்புணர்வு பலகை

காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் முக கவசத்துடன் பாரதியார் படம் வரைந்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் பள்ளியில் மாணவர்களின் கவனத்தை ஈர்த்த பாரதியார் விழிப்புணர்வு பலகை
X

அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகை.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவல் கட்டுபடுத்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அளித்தல். ஒரு நாள் விழிப்புணர்வு வாசகங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல் என பலவேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அரசு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்களும் ஒரு நாள் வழிகாட்டு நெறிமுறைகளை வலியுறுத்தி அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், பள்ளி மாணவருக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பள்ளிகள் மேற்கொண்டு வருகிறது. அதையும் தாண்டி அவ்வப்போது விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே அமைந்துள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி அவரது திருஉருவப்படத்தை கரும் பலகையில் முககவசத்துடன் அணிந்து உள்ளதுபோல் வரைந்துள்ளனர். அதில் இவரது புகழ்பெற்ற பாடலான பாப்பா பாட்டு பாணியில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம் நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

இது சற்று வித்தியாசமாக இருப்பதால் மாணவர்களிடையே அதிக கவனத்தை ஈர்த்தது.

Updated On: 12 Sep 2021 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  3. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  4. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  5. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  6. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  7. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  8. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  10. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...