/* */

பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி

10 பேர் இணைந்து குழு அமைத்து சலவையகம் அமைக்க, உபகரணங்கள் வாங்க ரூ 3 லட்சம் துறை மூலம் வழங்கப்படுகிறது.

HIGHLIGHTS

பிசி, எம்பிசி, சீர்மரபினர்கள் நவீன சலவையகம் அமைக்க நிதியுதவி
X

மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வெளியிட்ட செய்தி குறிப்பில் , காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் (ம) சீர்மரபினர் இன மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாறிவரும் சூழலுக்கு ஏற்பவும், மேற்கண்ட இன மக்களில் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து, நவீன சலவையகங்கள் அமைக்க தலா ரூ.3 இலட்சம் வீதம் தமிழகம் முழுவதும் 25 அலகுகள் ஏற்படுத்த அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பிவ, மிபிவ (ம) சீம வகுப்பை சார்ந்த (ஆண்/பெண்) 10 நபர்களை கொண்டு ஒரு குழு அமைத்து அக்குழுவிற்கு நவீன முறை சலவையகம் அமைக்க தேவைப்படும் உபகரணங்கள் வாங்க அதற்கான நிதி தோராயமாக பின்வருமாறு வழங்கப்படும். Washing Machine (10Kg) ரூ.1,00,000/-, Dryer (10Kg)- ரூ.75,000/-, Industrial Ironing Table (Table, Steamer and Iron box) ரூ.50,000/-, Table - ரூ.5,000/-, Desk - ரூ.10,000/-, இடைநிகழ் செலவினம் ரூ.30,000/- மற்றும் பணி மூலதனம் ரூ.30,000/- ஆக மொத்தம் ஒரு குழுவிற்கான தோராய செலவினம் ரூ.3,00,000/- வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Sep 2022 1:00 PM GMT

Related News