/* */

காஞ்சியில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்

புதிய காய்கறி சந்தைக்கு செல்ல வியாபாரிகளுக்கு முறையான அடையாள அட்டை பெருநகராட்சி வழங்காததால் காவல்துறையினருக்கும் பெரு நகராட்சி ஊழியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

காஞ்சியில் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினருக்கு இடையே வாக்குவாதம்
X

மாநகராட்சி ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சி.

காஞ்சிபுரத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தை காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு இன்று முதல் மாற்றம் செய்வதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் பெருநகராட்சி அறிவித்திருந்தது.

மேலும் இந்த காய்கறி சந்தையில் வியாபாரிகள் மட்டுமே பொருட்களை வாங்க முடியும் எனவும் பொதுமக்களுக்கு பொருட்கள் வழங்கப்படமாட்டாது என கூறிய பெருநகராட்சி வியாபாரிகளுக்கான அடையாள அட்டையை முறையாக வழங்காததால் இன்று துவக்க நாளில் காவல்துறை அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க அனுமதித்தனர்.

காவல்துறைக்கு முன்பே வியாபாரிகள் தங்களது இருசக்கர வாகனத்தில் பேருந்து நிலையத்தில் காய்கறி கடைகளை முன் நிறுத்தி பொருட்களை வாங்கியதால் சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இதைக்கண்ட காவல் ஆய்வாளர் உடனடியாக அனைத்து வாகனங்களையும் வெளியேற்றி அனுமதி உள்ளவர்கள் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து பெரு நகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கடும் வாக்குவாதங்கள் நிலவியது. அடையாள அட்டை வழங்கும் பணியை முறையாக மேற்கொள்ளாதது அப்பகுதியில் சமூக இடைவெளியை கண்காணிக்க பெருநகராட்சி ஊழியர்கள் மெத்தனம் காட்டியது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதேபோல் மற்றொரு பகுதியான ஓரிக்கை பேருந்து நிலையத்தில் முறையாக கடைகளை வியாபாரிகளுக்கு ஒப்படைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் ஒரு சில கடைகள் மட்டுமே இயங்கியது வியாபாரிகள் வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Updated On: 20 May 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...