/* */

‘தலித் விரோத நடவடிக்கைகளை தி.மு.க. ஊக்கப்படுத்துகிறது’- செ.கு.தமிழரசன்

தமிழகத்தில் தலித் விரோத நடவடிக்கைகளை தி.மு.க. ஊக்கப்படுத்துகிறது என்ற இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் கூறினார்.

HIGHLIGHTS

‘தலித் விரோத நடவடிக்கைகளை தி.மு.க. ஊக்கப்படுத்துகிறது’- செ.கு.தமிழரசன்
X

காஞ்சிபுரத்தில் இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு. தமிழரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப்படுத்தும், ஊக்குவிக்கும் மற்றும் பாதுகாக்கும் அரசாக தி.மு.க. செயல் பட்டு வருகிறது என இந்திய குடியரசு கட்சிஜ தலைவர் செ.கு. தமிழரசன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

டாக்டர் அம்பேத்கரின் 67 வது நினைவு நாளையொட்டி இந்திய குடியரசு கட்சியின் சார்பில் அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கும் விழா இன்று மாலை காஞ்சிபுரம் மண்டபத்தில் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான செ.கு. தமிழரசன் தலைமையில் நடைபெறுகிறது.

இவ்விழாவில் அயோத்திதாசர் விருது கார்மேகம் என்பவருக்கும், சிவராஜ் விருது காரல் மார்க்ஸ் சித்தார்த் என்பவருக்கும் , தாத்தா ரெட்டைமலை சீனிவாசன் விருது செந்தமிழ் சரவணன் என்பவருக்கும், அன்னை மீனாம்பாள் சிவராஜ் விருது சபிதா முனுசாமிக்கும் வழங்கப்பட உள்ளது.

இவ்விழாவிற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இக்கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன், மத்திய அரசு கடந்த 10 ஆண்டு காலமாக வறுமை ஒழிக்கப்படும் என கூறிய நிலையில் தற்போது வரை வறுமை ஒழிக்கப்படவில்லை. அனைவருக்கும் கழிவறை எனக் கூறிய நிலையில் இத்திட்டமும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினர்.

மேலும் இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழகம் முதல் இடம் வகிக்கிறது. கடந்த 15 மாதங்களாக வேங்கை வயல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பதும் இதற்கு உதாரணம் எனவும் ,தலித் விரோத நடவடிக்கைகளை உற்சாகப் படுத்துகின்ற, ஊக்குவிக்கின்ற, அவர்களைப் பாதுகாக்கும் வேலியாக தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது என கடும் குற்றச்சாட்டு தெரிவித்தார்.

இந்த சத்தியத்தின் போது மாநில பொருளாளர் கௌரிசங்கர் மற்றும் மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 4 Feb 2024 10:56 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!