/* */

ஏகனாபுரத்தில் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 450 வது நாள் போராட்டம்

பசுமையை காப்போம் விவசாயம் காப்போம் என கூறி பச்சை துண்டு உடுத்தி 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் விமான நிலைய திட்டத்தை கைவிட கோரினர்.

HIGHLIGHTS

ஏகனாபுரத்தில் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 450 வது நாள் போராட்டம்
X

இரண்டாவது பசுமை விமான நிலைய திட்டத்தை கைவிடக் கூறி ஏகனாபுரம் கிராம மக்கள் 200க்கும் மேற்பட்டோர் இன்று இரவு 450 வது நாள் போராட்டத்தில் ஈடுபட்ட போது.

பசுமையை காப்போம் விவசாயத்தை காப்போம் என கூறி பரந்தூர் பசுமை விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 450 வது நாள் ஆர்ப்பாட்ட கூட்டத்தில் பச்சை துண்டு அணிந்து போராட்டத்தில் ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் ஈடுபட்டனர்.

சென்னை மீனம்பாக்கத்திற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில் 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைய உள்ளது.

இதற்காக விவசாய நிலங்கள் நீர்நிலைகள் குடியிருப்பு பகுதிகள் என சுமார் 4950 ஏக்கர் இடங்கள் கையகப்படுத்த உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் கடந்த 450 நாட்களாக இரவு நேர போராட்டத்திலும் பல்வேறு நிலைகளில் சாலை மறியல் தலைமை செயலகம் நோக்கி பேரணி என பல போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இப்பகுதிகளை ஆய்வு செய்த கடந்த மாதம் மச்சநாதன் தலை மேலான குழுவினர் வந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அக்குழு வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டு வரை முதல் முறையாக கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது காவல்துறை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று 450 வது நாள் போராட்ட நிகழ்வில் பசுமையை காப்போம் விவசாயம் காப்போம் என கூறி பச்சை துண்டு உடுத்தி 200க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என கலந்து கொண்டு விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர்.

தங்கள் கிராமத்தில் ஒரு பிடி மண்ணை கூட விட்டு தர நாங்கள் தயாராக இல்லை எனவும் அரசு இதனை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அக்கிராமத்தில் சேர்ந்த சிறுமி நித்தியா , விவசாயி நிலை குறித்த பாடிய பாடல் பாடியது அனைவரின் மனதை உருக்கியது.

Updated On: 19 Oct 2023 7:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...