/* */

சென்னையை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 2 அமைச்சர்கள் ஆய்வு

சென்னையை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் அமைச்சர்கள் துரை முருகன், அன்பரசன் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

சென்னையை மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி பகுதியில் 2 அமைச்சர்கள் ஆய்வு
X

செம்பரம்பாக்கம் ஏரியினை  அமைச்சர்கள் துரைமுருகன், அன்பரசன் ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்கியது. நவம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என சென்னை வானிலை மண்டல ஆய்வு மையம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து வரும் நான்கு நாட்கள் அனைத்து மாவட்டத்திலும் கனமழை பெய்யும் என மூன்று தினங்களுக்கு முன் அறிவித்தது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த 12 தினங்களில் காஞ்சிபுரம் பகுதியில் 253 மில்லி மீட்டரும், ஸ்ரீபெரும்புதூரில் 264 மில்லி மீட்டர், உத்திரமேரூர் 387 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 178 மில்லி மீட்டர், செம்பரம்பாக்கம் பகுதியில் 348 மில்லி மீட்டரும், குன்றத்தூர் பகுதியில் 413 மில்லி மீட்டர் என மொத்தம் 1844 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று காஞ்சிபுரத்தில் 40 மில்லி மீட்டர், ஸ்ரீபெரும்புதூரில் 32 மில்லி மீட்டர் , உத்தரமேரூரில் 169 மில்லி மீட்டர், வாலாஜாபாத்தில் 17 மில்லி மீட்டரும், செம்பரம்பாக்கத்தில் 61 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 89 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆகியோர் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, சட்ட மன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் தலைமை பொறியாளர் முரளிதரன் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகளுடன் செம்பரம்பாக்கம் ஏரியினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த நிறுவனத் துறை அமைச்சர் துரைமுருகன் , செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீரால் எந்த பாதிப்பும் இல்லை என்றும் செம்பரம்பாக்கம் ஏரியை நிமிடத்திற்கு நிமிடம் கண்காணித்து வருவதால் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் முகலிவாக்கம் ,மாங்காடு பகுதியில் வெள்ள பாதிப்பு ஏற்பட செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் காரணம் இல்லை என்றார்.

மேலும் பூவிருந்தவல்லி சுற்றுவட்டத்தில் பெய்த மழை நீர் முகலிவாக்கம் வழியாக செல்வதால் சிறிது வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.வெள்ள நீர் வடிய தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து எவ்வளவு உபரி நீர் திறந்து விட்டாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை மேலும் மழையின் அளவைப் பொறுத்து திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட பகுதிகள் பல சென்னை புறநகரை ஒட்டி உள்ளதால் இதற்கென இரண்டு மூன்று ஆண்டுகால அவகாசத்தில் புதிய திட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டும் என தலைமை செயலாளருடன் தான் விவாதித்துள்ளதாகவும் விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு மழைநீர் வடிவதற்கு வழிவகை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Updated On: 13 Nov 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!