/* */

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும் காவல் நண்பர்கள் ரூ 13.14 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு காவல்துறை 1997- 2 அணி காக்கும் காவல் நண்பர்கள் குழுவினர் தங்களுடன் பயிற்சி பெற்ற காவலர்கள் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்கள் குடும்பத்திற்கு அனைவரும் ஒன்றிணைந்து நிதி திரட்டி அளித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு காக்கும் காவல் நண்பர்கள் ரூ 13.14 லட்சம் நிதியுதவி
X

1997-2அணி பிரிவு காக்கும் காவல் நண்பர்கள் சார்பாக மறைந்த காவலர் பூபதி குடும்பத்தினருக்குகுடும்ப நலநிதியாக ரூபாய் 13 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலையினை வழங்கும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர்.

தமிழக காவல்துறை 1997 இரண்டாவது பயிற்சி அணி சார்பில் காக்கும் காவலர் நண்பர்கள் என குழு அமைக்கப்பட்டு மாவட்டம் தோறும் நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.

இக்கால கட்டத்தில் காவல்துறை பயிற்சி எடுத்த அனைவரும் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்கள் பனிக்காலத்தில் சாலை விபத்து நோய் தாக்கம் உள்ளிட்டவைகளில் இறப்பு நேர்கையில் தமிழக அரசு சார்பில் சுமார் 3 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி உதவி வழங்கப்படுகிறது.

24 மணி நேரமும் காவல் பணியில் ஈடுபட்டு வரும் காவலர்களின் குடும்பத்திற்கு இத்தொகை ஈடாகாது என்ற கணிப்பில் உடன் பயிற்சி பெற்ற காவலர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியதே காக்கும் காவலர் நண்பர்கள் குழு.

இக்குழு மூலம் ஏதேனும் காவலர் நண்பர் இறக்கும் பட்சத்தில் இதிலுள்ள சுமார் 2500 நபர்கள் சிறு தொகையை நன்கொடையாக அளித்து அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு அக்குடும்பத்திற்கு நலநிதியாக வழங்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்த பூபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார்.

அவரது குடும்பத்திற்கு காக்கும் காவலர் நண்பர்கள் குழு சுமார் 13 லட்சத்து 14 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்து குடும்ப நல நிதியினை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

பூபதியின் குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் , காசோலையினை குடும்பத்தினரிடம் குடும்ப நல நிதியினை‌ அளித்தார்.

இதுகுறித்து இக்குழு தலைமை நிர்வாகி ராஜராஜன் கூறுகையில் , காக்கும் காவலர் நண்பர்கள் குழு உருவாக்கப்பட்டு தற்போது வரை 45 காவலர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது அவ்வகையில் இதுவரை 5 கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து நானூறு ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு காவல் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி பெண் குழந்தையில் இருப்பின் அவர்களுக்கு தனியாகவும் காவலரின் தாய் தந்தையருக்கு தனியாகவும் அவரது மனைவிக்கு தனியாக என தொகை பிரிக்கப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

அவர்களது குடும்பத்திற்கு என் நிதி அளிப்பது ஒரு வகையில் மகிழ்ச்சி அளித்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு நாங்கள் உறவினர்களாக இருப்போம் என்பதை அவர்கள் மனதிடமாக உணர்வதை மகிழ்ச்சியாக உள்ளது.

Updated On: 24 March 2023 2:52 AM GMT

Related News