/* */

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுபான்மையினர்களான இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி, ஜைன மதத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஒன்று முதல் 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை (ஐ.டி.ஐ., ஐ.டி.சி., வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு, இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்கள் உதவித் தொகை பெற www.scholarships.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பெற்று விண்ணப்பிக்கலாம்.

தகுதியான பள்ளி மாணவ, மாணவிகள் வரும் 15ம் தேதி வரையிலும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு வரும் 30ம் தேதிவரையிலும் விண்ணப்பிக்கலாம். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் இணைய தளத்தில் எளிதாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய குறியீட்டு எண்ணை மாணவ, மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

இத்திட்டம் தொடர்பான இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் https://www.minorityaffairs.gov.in/en/schemesperformance/scholarship-schemes என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களுக்கு கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Updated On: 5 Nov 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  2. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  3. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  4. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  6. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  7. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  8. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  10. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!