/* */

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தை அமாவாசை தினத்தில் 15 வேட்புமனுக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தை அமாவாசை தினத்தில் 15 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தை அமாவாசை தினத்தில் 15 வேட்புமனுக்கள்
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 5 பேரூராட்சிகளில் 153 கவுன்சிலர் பதவியிடங்கள் உள்ளன. கடந்த 28ம் தேதி வேட்பு மனுதாக்கல் துவங்கியது. இந்நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., மாவட்ட தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

தி.மு.க.,வில் தனது தோழமை கட்சிகளுக்கு இட ஒதுக்கீடு செய்வதிலும், வேட்பாளர்களை தேர்வு செய்வதிலும் தீவிர முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேபோல், அ.தி.மு.க., தலைமையில் இருந்து அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை. தே.மு.தி.க., பா.ம.க.,வில் வேட்பாளர் தேர்வு நடந்து வருகிறது.

வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதத்தால், வேட்பு மனு தாக்கலும் மந்தமாகவே உள்ளது. தை அமாவாசையையொட்டி மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படாததால் வேட்பு மனு தாக்கலின்றி அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

ஓரிரு இடங்களில் மட்டும் பிரதான கட்சி பிரமுகர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர். கள்ளக்குறிச்சியில் 2 சுயேச்சை, உளுந்துார்பேட்டையில் ஒரு தி.மு.க., உட்பட 4 பேர் என மாவட்டத்தில் 6 பேர் வேட்பு மனு அளித்தனர். திருக்கோவிலுார் நகராட்சியில் வேட்பு மனுதாக்கல் இல்லை.

அதேபோல், பேரூராட்சிகளான சின்னசேலம் பா.ம.க., 1, வடக்கனந்தல் - 3 (சுயேச்சை -2, லோக்ஜனசக்தி -1), சங்கராபுரம்- 2 (தே.மு.தி.க., -1, சுயேச்சை-1), மணலுார்பட்டை - 2 சுயேச்சைகள், தியாகதுருகம் - 1 (அ.தி.மு.க.,) என மொத்தம் 9 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் மொத்தம் 15 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 138 வார்டுகளில் ஒரு வேட்புமனுக்கள் கூட தாக்கல் செய்யப்படவில்லை.

Updated On: 1 Feb 2022 4:09 PM GMT

Related News