/* */

உங்களைத் தேடி உங்கள் ஊரில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

உங்களைத் தேடி உங்கள் ஊரில், திட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

உங்களைத் தேடி உங்கள் ஊரில், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
X

திண்டுக்கல்லில், உங்களைத் தேடி உங்கள் திட்டம், ஆய்வு செய்த ஆட்சியர் பூங்கொடி.

உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ்,

நத்தம் வட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி ஆய்வு மேற்கொண்டார்:

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர், அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திட வேண்டுமென்ற உன்னத நோக்கத்தின் அடிப்படையில் மக்களை நாடி, மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள்.

இத்திட்டமானது, திண்டுக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் செயல்

படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, நத்தம் வட்டத்தில் நேற்று(22.02.2024) தொடங்கி இன்றும்(23.02.2024) பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

நத்தம் வட்டம், முறையூர் ஊராட்சி, சின்னமுளையூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தினசரி பொதுமக்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் தரம், கால்நடைகளுக்கு வழங்கப்படும் தீவனம், பால் பதப்படுத்த வைக்கப்பட்டுள்ள குளிரூட்டும் இயந்திரம் மற்றும் பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சின்னமுளையூரில் கால்நடை மருந்தகத்தில் இன்று நடைபெற்ற கால்நடை மருத்துவம் மற்றும் மலடு நீக்க சிகிச்சை முகாமை பார்வையிட்டு, சிகிச்சை பெறும் கால்நடைகளின் எண்ணிக்கை, பயன்பெறும் விவசாயிகள் எண்ணிக்கை, கால்நடைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இராவுத்தன்பட்டி, முறையூர், சின்னமுளையூர், எரமநாயக்கன்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில், காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவின் தரம், மாணவர்களின் வருகை, பொருள்களின் இருப்பு, சமையல் அறை, குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

”உங்களைத்தேடி உங்கள் ஊரில்” திட்டம் என்பது பல்வேறு சேவைகளை வழங்குவதை மேம்படுத்தவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் திட்டப்பணிகளை விரைவாக செயல்படுத்தும், மற்றுமொரு திட்டமாகும். பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தும், அரசின் நலத்திட்டங்களும், சேவைகளும் மக்களுக்கு தடையின்றி சென்றடைவதை உறுதி செய்யும் ஒரு திட்டமாகும். எனவே, இத்திட்டத்தினை செயல்படுத்த அனைத்துப் பணியாளர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இந்தத் திட்டத்தை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும், என, மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி, தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Updated On: 22 Feb 2024 7:45 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!