/* */

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது

திண்டுக்கல் அருகே கன்னிவாடியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திண்டுக்கல் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரு இளைஞர்கள் கைது
X

கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்கள்.

திண்டுக்கல்லை அடுத்த பண்ணைக்காடு அருகே உள்ள ஆண்டிப்பட்டியை சேர்ந்தவர் முத்துமணி (வயது43) இவர் தனது வீட்டில் துப்பாக்கி வைத்திருப்பதாக தாண்டிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், அவரது வீட்டில் சோதனை செய்தபோது வீட்டில் நாட்டுத்துப்பாக்கி இருந்தது. ஆனால் துப்பாக்கிக்கான உரிமம் அவரிடம் இல்லை. இது தொடர்பாக முத்துமணியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தனது தந்தை காலத்தில் இருந்து துப்பாக்கி வைத்திருப்பதாகவும், விளை நிலங்களுக்குள் புகும் வனவிலங்குகளை விரட்டுவதற்காக அந்த துப்பாக்கியை பயன்படுத்தி வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, அந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துமணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கஞ்சா விற்ற 2 பேர் கைது

திண்டுக்கல்லை அடுத்த கன்னிவாடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸ் எஸ்.பி.பாஸ்கரனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், எஸ்.பி. தனிப்படை சார்பு ஆய்வாளர் அழகுபாண்டி மற்றும் காவலர்கள் கன்னிவாடி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குளத்துப்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த அஜித்குமார்(24), சஞ்சய்குமார்(23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 6 கிலோ கஞ்சா, 1 டூவீலர், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கன்னிவாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

திண்டுக்கல் நத்தம் ரோடு பொன்னகரம் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சார வாரிய துறையில் நிர்வாக பொறியாளராக பணிபுரியும் காளிமுத்து என்பவர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டியில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற சோதனையின்போது கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று அவரது வீட்டில் சோதனை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செயின் பறிப்பில் 2 வாலிபர்கள் கைது

திண்டுக்கல் கல்லறை மேடு அருகே கடந்த செப்டம்பர் 9-ம் இளையரசி(31) என்பவர் நடந்து வந்து கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் இளையரசி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் செயினை பறித்து சென்றது தொடர்பாக, நகர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து, மாவட்ட எஸ்.பி.பாஸ்கரன் உத்தரவின் டிஎஸ்பி. கோகுலகிருஷ்ணன் மேற்பார்வையில் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திக், நகர் குற்றத்தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன், ஜார்ஜ் காவலர்கள் ராதா, முகமது அலி, விசுவாசம், சக்திவேல் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் சிசிடிவி காவலர்கள் ஜான் மற்றும் செல்வி உதவியுடன் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து ,மேற்படி சம்பவத்தில் ஈடுபட்ட அப்துல்ரகுமான்(22), அன்வர்பாட்சா(23) ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து டூவீலரை பறிமுதல் செய்து 5 பவுன் செயினை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 10 Nov 2023 9:23 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்